பாக்கியலட்சுமிக்கு முன் முடிவுக்கு வரும் விஜய் டிவியின் முக்கியமான சீரியல்.. கண்ணீருடன் குட் பாய் சொன்ன நடிகை

Vijay Tv Serial: விஜய் டிவியில் சில சீரியல்கள் டிஆர்பி ரேட்டிங்கில் இடம் பிடிக்கவில்லை என்றாலும் தொடர்ந்து அந்த நாடகம் ஒரு வருடத்திற்கு மேல் ஒளிபரப்பாகிக் கொண்டுதான் வருகிறது. சில சீரியல்கள் 1500 எபிசோடு தாண்டிய நிலையில் கதை இல்லாமல் அரச்சமாவை அரைத்துக் கொண்டுதான் வருகிறது. இதில் ஒரு சீரியலாக தான் பாக்கியலட்சுமி சீரியல் இடம் பிடித்திருக்கிறது.

அந்த வகையில் கூடிய விரைவில் முடிவுக்கு வர இருப்பதால் ஏதாவது சென்டிமென்ட் காட்சியை வைத்து மக்களை தன் பக்கம் திருப்ப வேண்டும் என்பதற்காக தாத்தாவின் இறுதி அத்தியாயங்களை வைத்து, விட்ட இடத்தை மறுபடியும் தக்க வைத்து விட்டது. இதனால் இதை வைத்து கொஞ்ச நாள் உருட்டலாம் என்று கோபி, பாக்யா மீது வன்மத்துடன் பழிவாங்கும் விதமாக காட்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.

கோமாளியாக அலப்பறை பண்ணும் சீரியல் நடிகை

ஆனால் அதற்குள் இன்னொரு முக்கியமான சீரியல் இந்த வாரத்துடன் முடிவுக்கு வர இருக்கிறது. கிட்டத்தட்ட 575 எபிசோடுகள் தாண்டிய நிலையில் சுபம் போட தயாராகிவிட்டது. ஆனால் இந்த நாடகத்திற்கு ஆரம்பத்தில் மக்கள் சப்போர்ட் கொடுத்தாலும் போகப் போக இந்த நாடகத்தை வெறுக்கும் அளவிற்கு மக்களுக்கு பிடிக்காமல் போய்விட்டது.

இருந்தாலும் ஏதோ சில காரணங்களால் இப்பொழுது வரை உருட்டிக்கொண்டு வருகிறார்கள். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கிளைமாக்ஸ் காட்சிகள் நெருங்கிவிட்டது. அந்த வகையில் முடிவுக்கு வரும் சீரியல் எதுவென்றால் அர்னாவ் நடிப்பில் வந்து கொண்டிருக்கும் செல்லம்மா சீரியல் தான். இதில் செல்லம்மா கேரக்டரில் நடிக்கும் அன்சிதா தற்போது குக் வித்து கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கு பெற்று வருகிறார்.

இந்த சூழ்நிலையில் செல்லம்மா சீரியல் இந்த வாரத்துடன் முடிவுக்கு வந்துவிட்டது. இதன் கிளைமாக்ஸ் காட்சிகள் நேற்று எடுக்கப்பட்டு இருக்கிறது. அப்பொழுது எமோஷனல் ஆகி அழுத அன்சிதா எல்லாத்துக்கும் குட் பாய் சொல்லி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறார். தற்போது இந்த பதிவு வைரல் ஆகி வருகிறது. ஏற்கனவே இவர்கள் இருவரை பற்றி சர்ச்சைகள் எழும்பி நிலையில் இந்த நாடகத்தை பார்ப்பவர்கள் ஒட்டுமொத்தமாக வெறுத்து விட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -spot_img

Trending News