உங்களுக்கு ஒரு பொண்ணு இருந்தா இப்படி வருவீங்களா.. ராதிகாவை திருட்டுத்தனமாக சந்தித்து கேவலப்பட்ட கோபி

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவும் கோபியும் தகாத உறவில் இருக்கின்றனர் என்பதை அறிந்த பாக்யா, தன்னுடைய கணவரும் நெருங்கிய தோழியும் தன்னை முட்டாள் ஆக்கி விட்டனர் என்பதை தாங்கமுடியாமல் இடிந்துபோய் இருக்கிறார்.

இதனால் வீட்டைவிட்டு வெளியேறிய பாக்யாவை மாமனார் வீட்டிற்கு கூப்பிடுகிறார். உடனே பாக்யா, ‘உங்களுக்கு ஒரு பொண்ணு இருந்தால், இப்படியா செய்வீர்கள்?’ என கேட்கிறார். உடனே மாமனார், பாக்யாவின் நிலையை புரிந்துகொண்டு கோபியின் தவறான நடவடிக்கைக்கு பாக்யாவின் இந்த கோபம் சரியானதுதான் என அங்கிருந்து கிளம்புகிறார் .

இவ்வளவு பிரச்சனை நடந்து கொண்டிருக்கும் நிலையில், கோபி ராதிகாவை திருட்டுத்தனமாக பார்க்கிறார். அப்போது கோபி ராதிகாவை கொஞ்ச நாட்கள் மட்டும் பொறுமையாக இருந்தால் இந்த பிரச்சனை சரியாகிவிடும் என ஆறுதல் அளிக்கிறார்.

எப்படியாவது பாக்யாவை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை இரண்டாவது திருமணம் செய்து கொள்வேன் என கோபி, காதல் மன்னன் போல் 50 வயதில் தன்னுடைய ஆசை வார்த்தைகளால் மயக்குகிறார்.

ஆனால் பாக்யா உடைய நல்ல உள்ளத்தை புரிந்து கொண்ட ராதிகா, நிச்சயம் அவருக்கு துரோகம் செய்யக் கூடாது என்பதால், கோபியை அடியோடு வெறுத்து இனிமேல் அவரை சந்திக்க கூடாது என முடிவெடுத்து அந்த இடத்தை விட்டு கிளம்புகிறார்.

இதன்பிறகு பாக்யாவை சந்தித்து, இந்த பிரச்சினையை தற்காலிகமாக முடிக்க கோபி திட்டமிடுகிறார். அதே சமயம் ராதிகாவை விட்டு விடக் கூடாது என்பதற்காக பாக்யாவிடமிருந்து விவாகரத்து பெற்று, ராதிகாவை திருமணம் செய்து கொள்ள கோபி வில்லத்தனமாக யோசிக்கிறார்,

Next Story

- Advertisement -