புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

சக்காளத்தியுடன் ஒன்று சேர்ந்து ஆப்பு வைக்கும் பாக்கியா.. செத்து சுண்ணாம்பாக போகும் கோபி

Bhakkiyalakshmi serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா வீட்டிற்கு கோபி மற்றும் ராதிகா வந்து விட்டார்கள். எப்படியாவது கோபியிடம் இருந்து ராதிகாவை பிரித்து நம் வீட்டிலேயே வைத்துக் கொள்ள வேண்டும் என்று பாக்யாவின் மாமியார் ஒரு திட்டத்தை தீட்டினார். அதற்கேற்ற மாதிரி கோபியை வீட்டிற்கு அழைத்து வந்தார். பின்பு பின்னாடியே ராதிகாவும் வந்துவிட்டார்.

சரி இதற்குப் பிறகு பாக்கியா மற்றும் ராதிகா சண்டை போட்டுக் கொள்வார்கள். அதனால் கோபப்பட்டு ராதிகா வீட்டை விட்டு போய்விடுவார் என்று நினைத்தார் கோபியின் அம்மா. ஆனால் தற்போது எல்லாமே தலைகீழாக மாறிக்கொண்டு வருகிறது. அதாவது பாக்கியாவின் நிலைமையை புரிந்து அவருக்கு சப்போர்ட் செய்து வருகிறார் ராதிகா.

அத்துடன் பாக்யா துவண்டு போய் நிற்கும் நேரத்தில் கூட துணையாக நின்று ஆறுதலாக பேசுகிறார். அதுமட்டுமில்லாமல் பாக்யாவை கோபி மற்றும் மாமியார் ஏதாவது சொன்னால் கூட இவர்கள் வாய் அடைக்கும் அளவிற்கு ராதிகா பேசிவிடுகிறார். இன்னும் சொல்ல போனால் மாமியார் ஜம்பம் மற்றும் கோபியின் அழிச்சாட்டியம் எதுவும் ராதிகாவிடம் பலிக்கவில்லை.

Also read: அப்பத்தாவிற்கு சாவு மணி அடித்த குணசேகரன்.. கண்ணில் விரலை விட்டு ஆட்டும் ஜனனி

இதனைத் தொடர்ந்து பாக்யாவை குறை சொல்லி பேசும் கோபி மற்றும் மாமியாரிடம் ராதிகா துணிச்சலாக பேசி சப்போர்ட் செய்கிறார். அத்துடன் கோபி எந்த வேலைக்கும் போகாமல் அதைப்பற்றி கவலைப்படாமல் சுற்றி கொள்வதையும் அவ்வப்போது சுட்டி காமிக்கிறார். இதனை அடுத்து பழனிச்சாமி பாக்கியா வீட்டிற்கு வருகிறார். வந்ததும் முக்கியமான வேலை வெளியே இருக்கிறது. நம்ம இரண்டு பேரும் போக வேண்டும் வாருங்கள் என்று கூப்பிடுகிறார்.

இதை பார்த்த கோபி திருட்டு முழியாக திருதிருவென்று முழித்து பாக்யாவை போகவிடாமல் தடுக்க முயற்சிக்கிறார். ஆனால் இதை பின்னாடியில் இருந்து பார்த்த ராதிகா கோபியை கண்டிக்கிறார். உங்களுக்கு தேவையில்லாத விஷயத்தில் மூக்கை நுழைக்க வேண்டாம் என்பதற்கு ஏற்ப கோபியிடம் ராதிகா சொல்கிறார்.

அத்துடன் ராதிகாவிற்கு பாக்கியா காபி கொடுத்து பழைய நட்பை காட்டுகிறார்கள். இதை பார்த்ததும் கோபி மற்றும் அவருடைய அம்மா இது என்னடா பாக்யாவும் ராதிகாவும் ஒன்று சேர்ந்து விடுகிறார்கள். அப்படி என்றால் நம்ம கதை கந்தலாகிவிடும் என்ற பயத்தில் கோபி முழிக்கிறார். இனி ஒவ்வொரு நாளும் இவர்களிடையே மாட்டிக் கொண்டு கோபி செத்து சுண்ணாம்பாக தவிக்கப் போகிறார்.

Also read: இரண்டு வருஷத்துக்கு பின் எதிர்நீச்சலுக்கு விடிவு காலம்.. குணசேகரனின் ஆட்டம் க்ளோஸ்

- Advertisement -

Trending News