அம்பலமான கோபி, ராதிகாவின் உறவு.. இப்பவாது என்டு கார்டு போடுங்கன்னு கதறும் ரசிகர்கள்

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் கடந்த சில வாரங்களாகவே ரசிகர்கள் என்ன என்ன நடக்க வேண்டும் என எதிர்பார்த்தார்களோ அவை எல்லாம் வரிசையாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனால் இந்த சீரியல் ரசிகர்களுக்கு பிடித்தமான சீரியல்களின் லிஸ்டில் இடம்பெற்றிருக்கிறது. அத்துடன் பாக்யாவிற்கும், கோபியுடன் உறவில் இருப்பவர் ராதிகா என்ற விஷயம் தெரிந்துவிட்டது.

இதன் பிறகு பாக்யா எப்படி நடந்து கொள்வார் என்பதை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்த நிலையில், அந்த நிகழ்வு இன்று ஒளிபரப்பாக போகிறது. இதன்பிறகு பாக்யா, கோபி-ராதிகா இடையேயான உறவை தன்னுடைய குடும்பத்திற்கு தெரியப்படுத்தாமல் அமைதியாக இருந்து விடுவார் என நினைத்துக்கொண்டிருக்கும் போது அதற்கு எதிர் மாறாக கோபியின் கள்ளக்காதலை வீட்டில் இருப்பவர்களிடம் பாக்யா அம்பலப்படுத்தி விட்டார்.

இவ்வளவு நாள் தன்னுடைய மகனை மகான் என நினைத்துக்கொண்டிருந்த கோபியின் தாய்க்கு தூக்கி வாரி போட்டு விட்டது. ராதிகா தன் கோபியின் மனைவி எனக் கூறிக்கொண்டு மருத்துவமனையில் பில் கட்டியது, கோபியின் கையைப்பிடித்து நின்றுகொண்டிருந்தது, மனைவி என செல்போன் நம்பர் கொடுத்தது என எல்லாம் ராதிகா தான் என்பதை பாக்கியலட்சுமி தன்னுடைய குடும்பத்தினரிடம் விலாவரியாக கோபி-ராதிகா பற்றிய உறவை வெளிப்படுத்தி இருக்கிறார்.

பாக்யாவின் இந்த திடீர் மாற்றம் சீரியல் ரசிகர்களுக்கு தூக்கிவாரிப்போட்டது. மேலும் இதன் பிறகு பாக்யா கோபிக்கு சுத்தமாகவே மரியாதை கொடுக்க மாட்டார் என்பது தெரிந்துவிட்டது. அந்தளவுக்கு தன்னுடைய கணவரை தூக்கி எறிந்து பாக்யா பேசுகிறார். இவருடைய மிரட்டலான பார்வை, துணிச்சலான பேச்சு போன்றவற்றை பார்த்தால் பாக்கியலட்சுமி சீரியலில் இனி வேறு பாக்யாவை பார்க்கப்போகிறோம்.

மேலும் கோபி ராதிகாவுடன் வாழ்வதை தான் விரும்புவதால் குடும்பத்தினரின் விருப்பம் இருக்குதோ இல்லையோ என்பதை எல்லாம் கவலைப்படாமல் பாக்யாவிடம் இருந்து விவாகரத்து பெற்று விட்டு ராதிகாவுடன் சேர்ந்த வாழ போகிறான். இதை கோபி செய்வதற்கு முன்பே பாக்யா, கோபியை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளி அவனுக்கு என்டு கார்டு போட்டு விடுங்கள் என்று ரசிகர்கள் ஆத்திரம் அடைகின்றனர்.

இருப்பினும் கோபி அதையெல்லாம் பற்றி கவலைப்படாமல் தன்னுடைய கல்லூரி காதல் 25 வருடம் கழித்து மீண்டும் கிடைத்துவிட்டது என்றும் உடல் பசிக்காகவே பாக்யாவுடன் குடும்ப நடத்தினேன் என கிளம்பிவிடுவான். இதன்பிறகு பாக்யா கோபிக்கு சவாலாக துணிச்சலுடன் இனிவரும் நாட்களில் தன்னுடைய கேட்டரிங் தொழிலில் அதிக கவனம் செலுத்தி மிகப்பெரிய தொழிலதிபராக மாறி ஓஹோன்னு வரப்போகிறார்.

Next Story

- Advertisement -