கதிரிடம் செண்டிமெண்டாக பேசி லாக் செய்த கோமதி.. ருத்ரதாண்டவத்தை ஆடப்போகும் பாண்டியன்

Pandian Stores 2: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியலில், ராஜூ பண்ணிய ஒரு தவறால் ஒட்டு மொத்த குடும்பமும் கவலையில் தத்தளிக்கிறார்கள். அத்துடன் ராஜியை இந்த நிலைமையுடன் ஊருக்கு கூட்டிட்டு போனால் அங்கே இருப்பவர்கள் ஒவ்வொருவரும் தவறாக பேசுவார்கள். அண்ணனுக்கு மிகப்பெரிய அவமானமாக இருக்கும் என்று யோசித்து கோமதி ஒரு முடிவு பண்ணி விட்டார்.

அதாவது கதிருக்கும் ராஜிக்கும் கல்யாணத்தை பண்ணி வைத்து கணவன் மனைவியாக கூட்டிட்டு போனால் யாரும் ஏதும் பேச மாட்டாங்க. அத்துடன் சொந்தக்கார பையன் மீது ஆசைப்பட்டதால் வீட்டை விட்டு போயிருக்கிறார் என்பது மாதிரி ஆகிவிடும் என்று பிளான் பண்ணி விட்டார் கோமதி. ஆனால் அதற்காக ஒருத்தரை ஒருத்தர் பிடிக்காமல் இருக்கும் கதிருக்கும் ராஜிக்கும் வலுக்கட்டாயமாக கல்யாணத்தை நடத்தி வைக்கிறார்.

கதிர் எவ்வளவு சொல்லியும் கேட்காமல், கோமதி காலில் விழுந்து அம்மா சென்டிமெண்டாக பேசி அவரை லாக் செய்து விட்டார். அதே மாதிரி ராஜிடமும் இதுதான் வழி, இல்லை என்றால் உன்னுடைய அப்பா அம்மா எல்லாருடைய மானமும் போய்விடும் என்று சொல்லி ராஜியையும் திருமணத்திற்கு சம்மதிக்க வைத்து விட்டார்.

Also read: மறுபடியும் மீனாவிற்கு தாலி கட்டி கலாட்டா பண்ணும் முத்து.. தூக்கத்தில் உளறி கொட்டிய மனோஜ்

இதனை தொடர்ந்து இவர்களுடைய கல்யாண ஏற்பாட்டை பாக்யாவிடம் பண்ண சொல்லிவிட்டார். அதனால் கோவிலில் திருமணத்தை நடத்துவதற்காக பாக்யா மற்றும் எழில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து ராஜியையும் கதிரையும் திருமண கோலத்தில் கூட்டிட்டு வந்து விட்டார்கள். ஒருத்தரை ஒருத்தர் பிடிக்கவில்லை என்றாலும் சூழ்நிலை காரணமாக தற்போது இருவரும் இணையப் போகிறார்கள்.

பிறகு திருமணம் முடிந்த கையோடு ஊருக்கு இவர்கள் அனைவரையும் பாக்கியா தான் கூட்டிட்டு போகிறார். அப்பொழுது இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத பாண்டியன் மற்றும் ராஜி குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து நிற்கப் போகிறார்கள். சும்மாவே இரண்டு குடும்பத்துக்கும் ஒத்தே வராது, இதுல இப்படி ஒரு விஷயம் இருக்கிறது என்றால் இரண்டு குடும்பமும் வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கப் போகிறார்கள்.

அத்துடன் இதற்கெல்லாம் காரணமாக இருந்தது கோமதி தான் என்று தெரிந்தால் பாண்டியன், வீட்டில் ருத்ர தாண்டவம் தான் ஆடுவார். அதனால் கோமதி நைசாக இதிலிருந்து எஸ்கேப் ஆகி பாக்யா மீது பொறுப்பை அனைத்தையும் ஒப்படைத்து விட்டார். பாவம் கதிர் தான் எல்லா விஷயத்திலும் மாட்டிக் கொண்டு முழிக்கிறார்.

Also read: முக்கியமான சீரியலின் நேரத்தை மாற்றும் சன் டிவி.. டிஆர்பி யில் அடிவாங்கியதால் எதிர்நீச்சலுக்கு வந்த சோதனை