முக்கியமான சீரியலின் நேரத்தை மாற்றும் சன் டிவி.. டிஆர்பி யில் அடிவாங்கியதால் எதிர்நீச்சலுக்கு வந்த சோதனை

Sun tv serial time change: எத்தனை சேனல்கள் போட்டி போட்டு வந்தாலும் சன் டிவிக்கு மக்கள் மத்தியில் தனி ஒரு இடம் இருக்கிறது. அதனாலயே காலம் காலமாக சன் டிவி டிஆர்பி ரேட்டிங்கில் ஜொலித்து வருகிறது. இன்னும் சொல்ல போனால் சன் டிவியை விட முந்த வேண்டும் என்று விஜய் டிவி மட்டும் ஜீ தமிழ் போன்ற சேனல்கள் ஒவ்வொரு புது நாடகத்தையும் இறக்கிக் கொண்டு வருகிறார்கள்.

அது மட்டும் இல்லாமல் எந்த ஒரு நடிகர்கள் மக்கள் மனதை கவர்ந்திருக்கிறார்களோ அவர்களை எப்படியாவது இழுத்து அவர்கள் மூலம் நாடகத்தை கொடுக்கிறார்கள். ஆனாலும் இந்த தந்திரங்கள் அனைத்தும் மக்களிடம் எடுபடவில்லை. எப்பொழுதும் போல சன் டிவி சீரியலுக்கு தான் எங்கள் ஆதரவு என்று தொடர்ந்து நாடகத்தை பார்த்து வருகிறார்கள்.

அதனால் தான் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் ஐந்து இடத்தை பிடித்திருக்கிறது. அந்த வகையில் கடந்த இரண்டு வருடங்களாக முதலிடத்தில் இருந்து எதிர்நீச்சல் சீரியல் அனைவரையும் கவர்ந்தது. ஆனால் சில மாதங்களுக்கு முன்பு வந்த சிங்கப்பெண்ணே சீரியல் தான் தற்போது டிஆர்பி யில் முதல் இடத்தை பிடித்திருக்கிறது.

Also read: சன் டிவி சீரியல் ஹீரோவுடன் ஓவர் ரொமான்ஸில் புகுந்த வில்லி நடிகை.. விவாகரத்து ஆகி 3 வருடங்களுக்குள் ஏற்பட்ட காதல்

இந்நிலையில் மறுபடியும் மக்கள் மனதை குளிர வைக்கும் விதமாக சன் டிவி புதிய நாடகத்தை கொண்டு வருகிறார்கள். ஜீ தமிழில் பேரன்பு மற்றும் பிரியாத வரவேண்டும் சீரியலில் நடித்த விஜய் வெங்கடேசன் தற்போது மல்லி என்ற நாடகம் மூலம் என்டரி கொடுக்கப் போகிறார். இவருக்கு ஜோடியாக ஜீ தமிழில் சூரிய வம்சம் சீரியலில் நடித்த நிகிதா ராஜேஷ் கமிட் ஆகியிருக்கிறார். இந்த நாடகத்தை சரிகம நிறுவனம் தயாரிக்கப் போகிறது.

அதனால் இந்த நாடகம் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாக போகிறது. மேலும் தற்போது ஒன்பது மணிக்கு ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் 9.30 மணிக்கு, 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இனியா சீரியல் 10 மணிக்கு மாற போகிறது. ஏனென்றால் தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் எதிர்நீச்சல் சீரியல் கொஞ்சம் அடிவாங்கிதல் பழையபடி அந்த நாடகத்தை 9:30 மணிக்கு கொண்டு வருகிறார்கள்.

Also read: குணசேகரனை நாக்க புடுங்குற மாதிரி கேள்விக் கேட்ட ஆதிரை.. அடிமைகள் செய்த காரியத்தால் அரண்டு போன அண்ணன்