மாஸ்டர் ப்ளான் போட்ட கோபி.. கடைசியில மாட்டிக்கிட்டியே பங்கு

விஜய் டிவியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் தற்போது சுவாரஸ்யமான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது. பாக்கியா தற்போது ராதிகா வீட்டிற்கு சென்று தன் மனதில் உள்ள ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார். அப்போது ராதிகா தனக்கு கோபி உங்கள் கணவன் என்று தெரியாது என அழுகிறார்.

இந்நிலையில் செல்வியும் ராதிகாவை திட்டியதால் தற்போது ராதிகா என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்ற பெரிய எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் உள்ளனர். மறுபக்கம் கோபியின் அம்மா ஈஸ்வரி பாக்யா இந்த வீட்டுக்கு வந்தே ஆகவேண்டும் என்று கோபியிடம் சொல்கிறார்.

இதனால் என்ன செய்வதென்று யோசிக்கும் கோபி ஒரு மாஸ்டர் ப்ளான் போட்டு உள்ளார். அதாவது ராதிகா திருமணத்திற்கு சம்மதித்த உடன் பாக்கியாவை விவாகரத்து செய்துவிடலாம். அதற்குள் எப்படியாவது பாக்கியாவை சமாதானப்படுத்தி வீட்டுக்கு அழைத்து வர வேண்டும் என்ற முடிவை கோபி எடுத்துள்ளார்.

இதனால் பாக்கியாவை பார்ப்பதற்காக கோபி செல்கிறார். அப்போது நான் செஞ்சதெல்லாம் சரின்னு சொல்லல, இனியா ரொம்ப கஷ்டப்படுறாள் வீட்டுக்கு வா என கோபி பாக்கியாவை அழைக்கிறார். முதலில் வர மறுக்கும் பாக்கியா பிறகு இனியாவுக்குகாக வீட்டுக்கு வர சம்மதிக்கிறார்.

ஆனால் இனிமேலும் கோபியை நம்பமுடியாது என பாக்கியா சத்தியம் வாங்குகிறார். ஆர்வக்கோளாறில் கோபி, நீ தான் என்னுடைய வாழ்க்கை ராதிகா என சத்தியம் செய்கிறார். இதைக் கேட்டு அப்படியே பாக்கியா அதிர்ச்சியில் உறைகிறார். தற்போதும் கோபி ராதிகா நினைப்பில் தான் உள்ளார் என்பதை பாக்யா புரிந்துகொண்டார்.

ஆனால் கோபி இவ்வளவு பெரிய மாஸ்டர் பிளான் போட்டும் கடைசியில் ராதிகா பெயரை சொல்லி மாட்டிக் கொண்டார். இதனால் தற்போது பாக்கியா என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இவ்வாறு அதிரடித் திருப்பங்களுடன் இந்த வார பாக்கியலட்சுமி தொடர் வர இருக்கிறது.

Next Story

- Advertisement -