சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

குடும்பத்திடம் கையும் களவுமாய் மாட்டிட்டியே பங்கு(கோபி).. பாக்யா மூலம் திருப்பி அடிக்க போகும் கர்மா

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், கோபி படிச்சு கௌரவமாக வேலை பார்த்த தெனாவட்டில் இத்தனை நாட்களாக பாக்யாவை மட்டம் தட்டி வந்தார். ஆனால் தற்போது உள்ளதும் போச்சே நொள்ளை கண்ணா என்று சொல்வதற்கு ஏற்ப கடன் மேல் கடன் வாங்கி நஷ்டப்பட்டு இருந்த பிசினஸ் எல்லாம் கைவிட்டு போய்விட்டது.

ஆனாலும் நான் கீழே விழுந்தாலும் மீசையில் மண்ணு ஒட்டவில்லை என்று மல்லு வெட்டி மைனராக ஓவர் ஆட்டம் போட்டு சுற்றினார். தனக்கு வேலை இல்லை என்ற விஷயத்தை குடும்பத்தில் இருப்பவர்களிடம் மறைத்து பொய்ய்க்கு மேல் பொய் சொல்லி ராதிகாவையும் ஏமாற்றி வந்தார். அந்த வகையில் ராதிகா திடீரென்று ஆபீசுக்கு போய் பார்த்தால் கடந்த சில வாரங்களுக்கு முன்னே ஆபீஸ் இழுத்து மூடப்பட்ட விட்டது என்ற விஷயம் தெரிந்து விட்டது.

பிறகு ராதிகா அங்கே இருந்து கொண்டே கோபிக்கு போன் பண்ணுகிறார். எங்கே இருக்கீங்க என்று கேட்கும் பொழுது கோபி வழக்கம்போல் ரீல் சுற்ற ஆரம்பித்து விட்டார். அதன் பின் நான் உங்கள் ஆபிஸ்க்கு முன்னாடி தான் நின்னு பேசுகிறேன் என சொல்லி எல்லா விஷயமும் தெரிந்து விட்டது என்று ராதிகா ஃபோனை கட் பண்ணுகிறார்.

Also read: நிஜத்தில் குடிபோதையில் விபத்தில் சிக்கிய எதிர்நீச்சல் மருமகள்.. ஊருக்கு தான் உபதேசம் பண்றது எல்லாம் கேப்மாரித்தனம்

உடனே ராதிகா இந்த விஷயத்தை வீட்டில் சொல்லக்கூடாது என்பதற்காக வரும் வழியிலேயே கோபி அவரை தாஜா பண்ணுகிறார். ஆனாலும் ராதிகா எதுவும் காது கொடுத்து கேட்காமல் வீட்டிற்குள் நுழைகிறார். இதையெல்லாம் பார்த்த கோபியின் அம்மா என்ன ஆச்சு உங்க ரெண்டு பேருக்கும் ஏதாவது சண்டையா என்று கேட்கிறார். அதற்கு கோபி அதெல்லாம் ஒன்னும் இல்ல ஒரு சின்ன பிரச்சனை தான் அதை நான் சமாளித்துக்கொள்கிறேன் என்று கூறுகிறார்.

இதைக் கேட்ட ராதிகா என்னது சின்ன விஷயமா என்று கோபத்துடன் பொங்குகிறார். உடனே ராதிகா விஷயத்தை சொல்ல வரும் பொழுது கோபி சொல்ல வேண்டாம் என்று தடுக்கிறார். ஆனாலும் ராதிகா அனைவரது முன்னாடியும் கோபிக்கு வேலை இல்லை, கம்பெனியை இழுத்து மூடி விட்டு நம்மளை ஏமாற்றி இருக்கிறார் என்று உண்மையை போட்டு உடைத்து விடுகிறார்.

இதை தெரிந்ததும் ஒவ்வொருவரும் அதிர்ச்சியில் கேள்வி மேல் கேள்வி கேட்கிறார்கள். இதற்கு பதில் சொல்ல முடியாமல் கோபி தடுமாறுகிறார். அங்கே தான் பாக்கியா கெத்தாக வந்து நிற்கிறார். உடனே இதை பார்த்த கோபி வழக்கம்போல் பாக்கியாவை வம்பு இழுத்து என்னடா நம்ம பிசினஸ்ல மேல மேல போய்கிட்டு இருக்கும், இவர் கீழே போய் தோர்த்துட்டாரே என்று சந்தோசமாக குதிக்கிறாயா என்று சொல்கிறார். அந்த வகையில் கர்மா எப்பொழுதுமே திருப்பி அடிக்கும் என்பதற்கு ஏற்ற மாதிரி தற்போது கோபி வெத்துவேட்டாக சுற்றி வருகிறார்.

Also read: இரண்டாம் தாரமாக தர்ஷினியை படுகுழியில் தள்ளும் கொடூர குணசேகரன்.. கமுக்கமாக வேடிக்கை பார்க்கும் சிம்மக்கல் ராணி

- Advertisement -

Trending News