புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

டிஆர்பியில் முந்த ‘எதிர்நீச்சல்’ குணசேகரனுக்கு விஜய் டிவி விரித்த வலை.. எந்த சீரியலுக்கு தெரியுமா?

Ethirneechal Serial: சின்னத்திரை தொலைக்காட்சிகள் டிஆர்பியில் ஒன்றை ஒன்று முந்துவதற்கு பல்வேறு நிகழ்ச்சிகளையும், சீரியல்களையும் களமிறக்குகிறார்கள். இதில் சீரியல் டி ஆர் பிக்கு தான் அதிக மவுசு இருக்கிறது. எந்த சேனலின் சீரியலை மக்கள் விரும்பி பார்க்கிறார்கள் என்பதுதான் தற்போது கடும் போட்டியாக போய்க்கொண்டிருக்கும் விஷயம். இதற்காக மக்கள் எதிர்பார்க்காத நிறைய கேரக்டர்களை சீரியலுக்குள் கொண்டு வருகிறார்கள்.

அப்படி தற்போது சின்னத்திரை சீரியல்களில் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்படும் சீரியல்தான் எதிர்நீச்சல். ஒவ்வொரு வாரமும் டிஆர்பி யில் உச்சத்தை தொட்டுக் கொண்டிருக்கிறது இந்த கதை. மேலும் பல சினிமா பிரபலங்களும் இந்த சீரியலை நாங்கள் பார்க்கின்றோம் என்று சொல்லி இன்னும் ஹைப் ஏத்தி வருகின்றனர். தளபதி விஜய்யின் அம்மா சோபா சந்திரசேகர், மிகப்பெரிய அரசியல் பிரமுகரான சுப வீர பாண்டியன் போன்றவர்கள் கூட இந்த சீரியல் தங்களுக்கு ரொம்பவும் பிடித்திருப்பதாக மீடியாவில் சொல்லி இருக்கின்றனர்.

Also Read:பாக்யாவை பழிவாங்க சவால் விடும் ராதிகா.. கோபிக்கு அசிங்கபடுவதே வேலையா போச்சு

எதிர்நீச்சல் சீரியலில் மக்களால் அதிகம் விரும்பி பார்க்கப்படும் கேரக்டர் ஆதி குணசேகரன் தான். அவர் எந்த அளவுக்கு வில்லத்தனம் செய்கிறாரோ அதே அளவுக்கு ரசிகர்களுக்கு அவரைப் பிடித்தும் போய்விட்டது. இந்த ஆதி குணசேகரன் கேரக்டரில் நடித்துக் கொண்டிருப்பவர் தான் மாரிமுத்து. சினிமாவில் பல வருடங்களாக உதவி இயக்குனராக இருந்த இவர் நிறைய படங்களிலும் நடித்திருக்கிறார். இவருக்கென்று ஒரு அடையாளத்தை கொடுத்தது தான் எதிர்நீச்சல் சீரியல்.

பயங்கர ட்ரெண்டில் இருக்கும் இந்த ஆதி குணசேகரன் கேரக்டரில் நடித்து வரும் மாரிமுத்துவை எப்படியாவது தங்களுடைய சேனலுக்கு கொண்டு வந்து விட வேண்டும் என்று விஜய் டிவி பிளான் போட்டு இருக்கிறது. அந்த சேனலில் தற்போது புதிதாக தொடங்க இருக்கும் சீரியல்தான் கிழக்கு வாசல். இதில் தளபதி விஜய்யின் அப்பாவும், இயக்குனருமான எஸ் ஏ சந்திரசேகர் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். இந்த கேரக்டருக்காக தான் மாரிமுத்துவிடம் பேசி இருக்கிறார்கள்.

Also Read:செல்லா காசாக நிற்கும் குணசேகரன்.. கௌதமிடம் மொத்த பொறுப்பையும் ஒப்படைத்த ஜீவானந்தம்

மாரிமுத்துவை அணுகி கேட்டபோது அவரால் அந்த சீரியல் பண்ண முடியாத சூழல் இருந்ததாம். அதனால் தான் சந்திரசேகர் இடம் இந்த கேரக்டர் போயிருக்கிறது. எப்போதுமே ஒரு சேனலில் வேலை செய்து கொண்டிருக்கும்போது, வேறொரு சேனலுக்கு செல்ல கூடாது என்பது போல் பல நிபந்தனைகள் இருக்கும். அதனால் தான் மாரிமுத்துவால் அந்த கேரக்டர் பண்ண முடியாமல் போயிருக்கும் என்பது நன்றாக தெரிகிறது.

சன் டிவியின் டிஆர்பிக்கு முக்கிய காரணமாக இருக்கும் எதிர்நீச்சல் சீரியலில் முக்கியமான கேரக்டரையே தங்களின் சேனலுக்கு இழுத்து வர திட்டம் போட்டு இருக்கிறது விஜய் டிவி. தற்போது ட்ரெண்டிங் சீரியல் ஆக்டர் ஆன மாரிமுத்து நடித்தால் கண்டிப்பாக இந்த சீரியலும் மக்களால் அதிகம் விரும்பி பார்க்கப்படும். இதற்காகத்தான் விஜய் டிவி இப்படி ஒரு வேலையை பார்த்து இருக்கிறது.

Also Read:வசமாய் சிக்கிய கண்ணன்.. ஐஸ்வர்யா கொஞ்சநஞ்ச ஆட்டமா போட்டா, இது தேவைதான்

- Advertisement -

Trending News