பெயிலியர் ஹீரோயின் கீர்த்தி சுரேஷ் கையில் இவ்வளவு சொத்துக்களா.? தங்கத்தட்டில் பிறந்த ஹீரோயினை சரித்த படம்

Flop Heroine: கீர்த்தி சுரேஷ்- விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன், தனுஷ் என பெரிய ஹீரோக்களுடன் நடித்து தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்து வந்தார். ஆனால் அவர் நடித்த ஒரே படத்தால் தமிழில் சம்பாதித்த மொத்த பெயரும் வீணாப்போனது.

15 படங்களுக்கு மேல் தமிழ் சினிமாவில் ஹீரோயின் ஆக நடித்திருந்தாலும் எல்லா படங்களுமே இவருக்கு பெயிலியர் படங்களாகவே அமைந்தது. இவர் நடித்து ஓரளவு ஓடிய படம் என்றால் சிவகார்த்திகேயனின் ரஜினி முருகன் மட்டும் தான்.இவர் நடித்த ரிவால்வர் ரீட்டா, ரகு தாத்தா, கன்னிவெடி போன்ற படங்கள் கிடப்பில் கிடைக்கிறது.

ரெமோ, பைரவா, தானா சேர்ந்த கூட்டம், சாமி ஸ்கொயர், சண்டக்கோழி 2 என அத்தனை படங்களும் இவருக்கு பிளாப் படங்களாகவே அமைந்தது. அதன் பின் தமிழில் இவருக்கு கொஞ்சம் கொஞ்சமாக மார்க்கெட் பறிபோனது. தற்சமயம் தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

2015 ஆம் ஆண்டு இது என்ன மாயம் என்ற படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பின் பெரிய ஹீரோக்கள் படத்தில் நடித்தாலும் எந்த படங்களும் இவருக்கு கை கொடுக்கவில்லை. கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் தமிழ் சினிமாவில் நடித்து மொத்தமா இவர் சம்பாதித்த சொத்துக்கள் 40 கோடிகள்.

தங்கத்தட்டில் பிறந்த ஹீரோயினை சரித்த படம்

கீர்த்தி சுரேஷ் 2 விலை உயர்ந்த கார்கள் வைத்திருக்கிறார். பிஎம்டபிள்யூ மற்றும் பென்ஸ் இவர் வீட்டு கேரேஜில் இருக்கிறது. மலையாள திரை உலகின் சினிமா தயாரிப்பாளராக வெற்றிகரமாக உலா வந்த சுரேஷ்குமாரின் மகள் தான் கீர்த்தி சுரேஷ். இவரது தாய் மேனகாவும் நடிகைதான்

மார்க்கெட் இல்லாத கீர்த்தி சுரேஷ் ஒரு படத்திற்கு நான்கு கோடிகள் வரை சம்பளம் வாங்குகிறார்.. பிறக்கும்போதே செல்வ செழிப்பு மிக்க குடும்பத்தில் தான் கீர்த்தி சுரேஷ் பிறந்துள்ளார். இவர் நடித்த சாணி காகிதம் படம் மோசமான விமர்சனத்தை கொடுத்தது. இந்த படத்தால் இவரது கேரியரே சோலி முடிந்தது.

Next Story

- Advertisement -