தளபதி66 படம் உருவாக காரணமே கீர்த்தி சுரேஷ் தான்.. அந்த ஒருநாள் சந்திப்பில் வெளியான அறிவிப்பு

விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து இந்தியா முழுதும் வெளியிட திட்டமிட்டுள்ளது. இதனால் தற்போது படக்குழுவினர் மகிழ்ச்சியாக இருப்பதோடு விருவிருப்பாக படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர்.

ஆனால் தற்போது விஜய் நடிப்பில் உருவாகவுள்ள தளபதி66 படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதற்கு காரணம் தெலுங்கில் பிரபல இயக்குனரான வம்சி படிபல்லி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் இரண்டிலும் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

ஆனால் தில் ராஜு தளபதி66 படத்தை தயாரிப்பதற்கான வாய்ப்பை கீர்த்தி சுரேஷ் தான் வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கீர்த்தி சுரேஸ் தெலுங்கில் பல படங்களில் பணியாற்றி வருகிறார். அதனால் தெலுங்கு தயாரிப்பாளரான தில் ராஜு கீர்த்தி சுரேஷிடம் காதோரமாக ஒரு விஷயத்தை கூறியுள்ளார்.

அதாவது தில் ராஜு கீர்த்தி சுரேஷிடம் நான் விஜய்யை வைத்து எப்படியாவது ஒரு படத்தை தயாரித்து விட வேண்டும் நீங்கள் அவருடன் நடித்துள்ளீர்கள் இதைப்பற்றி அவரிடம் பேச முடியுமா என கேட்டுள்ளார். பதிலுக்கு கீர்த்தி சுரேஷ் கண்டிப்பாக உங்களுக்கு நான் உதவுகிறேன் எனக்கூறிவிட்டு விஜய்யை சந்தித்தார். அடுத்த நிமிடமே தளபதி66 படத்தின் கதையைக் கூறிவிட்டு படத்தின்தயாரிப்பாளராக தில் ராஜுவை வைத்துக்கொள்ளலாம் என விஜய்யும் சொல்லிவிட்டார்.

vijay-keerthy
vijay-keerthy

மேலும் விஜய்யும் படத்தின் பட்ஜெட்டுக்கு சரி என்றால் ஓகே என சொல்ல இதனை கீர்த்தி சுரேஸ் தில் ராஜுவிடம் கூற உடனே தளபதி66 படத்தில் தில் ராஜூ தயாரிப்பாளரான செய்தி உறுதியானது. தற்போது கீர்த்தி சுரேஷ் மூலம்தான் விஜய் மற்றும் தில் ராஜு இருவருக்கும் வாய்ப்பு உருவாகியதாக கூறி வருகின்றனர்.

மேலும் கீர்த்தி சுரேஷ் மூலம் தளபதி66 படம் உருவாவதால் கண்டிப்பாக கீர்த்தி சுரேஷ்தான் கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. மேலும் இவ்வளவு பெரிய பிராஜக்ட் உருவாக்கிக் கொடுத்தால் கண்டிப்பாக வம்சி படிபல்லி கீர்த்தி சுரேஷ் மற்றும் மற்றொரு துணை கதாநாயகி வைத்து படத்தை உருவாக்குவார் என கூறி வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்