ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

முழு நேர வேலையாகவும் காதலித்த ஜெமினியின் 5 படங்கள்.. வசீகரா பேச்சால் கவர்ந்த காதல் மன்னன்

ஜெமினி கணேசன் படம் என்றாலே காதலுக்கு பஞ்சம் இருக்காது என்று நடித்துக் காட்டியவர். அதிலும் பல பெண்களை வசீகரம் செய்வதில் இவரை போல் யாரும் கிடையாது என்று பெயரை வாங்கும் அளவிற்கு தில்லாலங்கடி வேலையை பார்த்து காதலித்திருப்பார். இவரது படங்கள் பொதுவாகவே சண்டையாகவோ அல்லது அதிரடியாகவும் இருக்காது. இவர் காதல் சம்பந்தமான படங்களை மட்டுமே நடிப்பதில் வல்லவராக இருந்ததால் இவரது படங்களுக்கு சாம்பார் என்று பெயர் அந்த காலத்தில் வைக்கப்பட்டது. அப்படி இவர் காதல் மன்னனாக பெயர் வாங்கிய படங்களை பற்றி பார்க்கலாம்.

கல்யாண பரிசு: ஸ்ரீதர் இயக்கத்தில் 1959 ஆம் ஆண்டு கல்யாண பரிசு திரைப்படம் வெளிவந்தது. இதில் ஜெமினி கணேசன், சரோஜாதேவி, கே ஏ தங்கவேலு மற்றும் எம் சரோஜா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படம் முக்கோண காதல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும். அதாவது ஜெமினி கணேசன், அக்கா மற்றும் தங்கையை காதலிப்பதாக சொல்லி ஒருத்தரை ஒருத்தர் தெரியாமல் ஏமாற்றி காதலிப்பார். இதை தெரிந்து கொண்ட தங்கை, அக்காவுக்காக இவரது காதலை தியாகம் செய்ய முடிவு செய்கிறாள். இப்படம் விமர்சன ரீதியாக அதிகமான பாராட்டுகளை பெற்றிருக்கிறது. மற்றும் வெள்ளி விழா படமாகவும் மாறியது.

Also read: புகழ் போதையில் ஜெமினியை கழட்டிவிட்ட நடிகை.. மறைக்கப்பட்ட நடிகையர் திலகத்தின் மறுபக்கம்

நான் அவன் இல்லை: கே பாலச்சந்தர் இயக்கத்தில் 1974 ஆம் ஆண்டு நான் அவன் இல்லை திரைப்படம் வெளிவந்தது. இதில் ஜெமினி கணேசன், லட்சுமி, பூரணம் விஸ்வநாதன், செந்தாமரை மற்றும் ஜெயபாரதி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் ஜெமினி கணேசன் பலவிதமான அடையாளங்களை வைத்துக்கொண்டு பல பெண்களை வசீகரித்து திருமணம் செய்யும் நோக்கத்துடன் இருக்கக்கூடியவராக நிறைய தில்லாலங்கடி வேலையை செய்து வருவார். இப்படம் வணிக ரீதியாகவும் மற்றும் விமர்சன ரீதியாகவும் பாராட்டுகளை பெற்றது.

மனம்போல் மாங்கல்யம்: பி புல்லையா இயக்கத்தில் 1953 ஆம் ஆண்டு மனம்போல் மாங்கல்யம் திரைப்படம் வெளிவந்தது. இதில் ஜெமினி கணேசன், சாவித்திரி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இதில் ஜெமினி கணேசன் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். இப்படம் வணிக ரீதியாக அதிக வசூலை பெற்றது.

Also read: சொந்த வாழ்க்கை, சினிமா இரண்டிலுமே சக்கை போடு போட்ட ஜெமினி கணேசன்.. காதல் மன்னன் என்று பெயர் வர இதுதான் காரணம்

கற்பகம்: கே.எஸ் கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் 1963 ஆம் ஆண்டு கற்பகம் திரைப்படம் வெளிவந்தது. இதில் ஜெமினி கணேசன், எஸ்.வி.ரங்காராவ், எம் ஆர் ராதா, முத்துராமன், கே ஆர் விஜயா மற்றும் சாவித்திரி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் ஒரு பணக்கார விவசாயி தனது தொழிலை கவனிப்பதற்காக புதிதாக திருமணமான தனது மகள் மற்றும் அவரது கணவர் அவர்கள் இருவரையும் தனது வீட்டில் தங்குமாறு சொல்கிறார். பின்பு இவருடைய மகன் பணத்தை வீணடிக்க தொடங்கும் போது வரும் பிரச்சினைகளை சமாளிக்கும் விதமாக எடுக்கப்பட்டிருக்கும்.

அவளுக்கென்று ஓர் மனம்: ஸ்ரீதர் இயக்கத்தில் 1971 ஆம் ஆண்டு அவளுக்கென்று ஓர் மனம் திரைப்படம் வெளிவந்தது. இதில் ஜெமினி கணேசன், முத்துராமன், சுந்தர் ராஜன், வி.எஸ் ராகவன், பாரதி, ருக்மணி மற்றும் காஞ்சனா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் இரண்டு பெண்கள் ஒருவரையே காதலிப்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும்.

Also read: சொந்த வாழ்க்கை, சினிமா இரண்டிலுமே சக்கை போடு போட்ட ஜெமினி கணேசன்.. காதல் மன்னன் என்று பெயர் வர இதுதான் காரணம்

- Advertisement -

Trending News