ஜெயிலரில் கதையோடு ஒட்டாத 5 கதாபாத்திரங்கள்.. மில்க் பியூட்டியை வேஸ்ட் பீஸ் ஆக்கிட்டியே நெல்சா

Five Characters Are Used Unnecessarily In Jailer: ரஜினியின் ஜெயிலர் படம் நேற்று வெளியான நிலையில் இணையம் முழுக்க இந்த படத்தை பற்றிய செய்திகள் தான் தொடர்ந்து வெளியாகி கொண்டு இருக்கிறது. ஆரம்பம் முதலில் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகம் இருந்ததற்கான முக்கிய காரணம் படத்தில் ஏகப்பட்ட முன்னணி பிரபலங்கள் நடித்திருந்தார்கள்.

அவர்களை சரியாக நெல்சன் பயன்படுத்தினாரா என்பது கேள்விக்குறியாக தான் இருக்கிறது. அந்த வகையில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், நடிகர் மோகன்லால், மற்றும் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் ஆகியோர் ஜெயிலர் படத்தில் நடித்திருந்தார்கள். இவர்கள் மூவரையுமே நெல்சன் சரியாக பயன்படுத்திக் கொண்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

Also Read : ஐசியுக்கு போன ஃபேன்ஸ்.. ஒரு நியாயம் வேண்டாமா நெல்சா? பங்கமாக கலாய்த்த ப்ளூ சட்டையின் விமர்சனம்

சில காட்சிகளில் மட்டுமே நடித்திருந்தாலும் கேமியோ தோற்றத்திற்கு சரியாக பொருந்தி இருந்தார்கள். ஆனால் கதையோடு ஒட்டாத ஐந்து கதாபாத்திரங்கள் ஜெயிலர் படத்தில் இடம்பெற்றது. மில்க் பியூட்டி தமன்னா காவாலா பாடலில் ஸ்கோர் செய்த நிலையில் படத்தில் அவருக்கு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு காட்சிகள் கிடைக்கவில்லை.

மேலும் நடிகர் சுனிலையும் தேவையில்லாத ஆணியாகத்தான் நெல்சன் பயன்படுத்தி இருக்கிறார். யோகி பாபுவின் காமெடி படத்திற்கு பக்க பலமாக அமைந்த நிலையில் ரெடின் கிங்ஸிலியை தேவை இல்லாமல் பயன்படுத்தி இருக்கிறார். நெல்சனின் படங்களில் ரெடின் கிங்ஸ்லி தொடர்ந்து நடித்து வருகிறார். ஆனால் ஜெயிலரில் அவருடைய கதாபாத்திரம் கதையுடன் ஒட்டவில்லை.

Also Read : சூப்பர் ஸ்டார், நெல்சன் காம்போ வெற்றி பெற்றதா.? முதல் நாள் கலெக்ஷன் ரிப்போர்ட்

அதேபோல் விஜய் டிவி பிரபலமான அறந்தாங்கி நிஷா ஜெயிலர் படத்திற்கு தேவையே இல்லாத ஒரு கதாபாத்திரம் தான். மேலும் ரஜினியின் மகனாக வசந்த் ரவி நடித்திருந்தார். அஸ்வின்ஸ் படத்தில் அவருடைய நடிப்பு பலராலும் பாராட்டப்பட்ட நிலையில் ஜெயிலர் படத்தில் அவருடைய நடிப்பு எடுபடவில்லை.

மேலும் பீஸ்ட் படத்தில் உள்ள குரூப்பை அப்படியே ஜெயிலர் படத்திலும் நெல்சன் பயன்படுத்தி இருக்கிறார். முதல் பாதையில் ரசிகர்களை கவர்ந்தாலும் இரண்டாம் பாதியில் தொய்வு ஏற்பட்டிருக்கிறது. மொத்தத்தில் சில இடங்களில் நெல்சன் கோட்டை விட்டுவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

Also Read : ஐட்டம் பாட்டுக்கு இத்தனை கோடியா.? ஜெயிலர் படத்துக்காக தமன்னா வாங்கிய சம்பளம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்