ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

ஐசியுக்கு போன ஃபேன்ஸ்.. ஒரு நியாயம் வேண்டாமா நெல்சா? பங்கமாக கலாய்த்த ப்ளூ சட்டையின் விமர்சனம்

Blue Sattai Maran Jailer Review: சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தொடர்ந்து ரஜினி வம்பு இழுக்கும் படியாக பதிவுகளை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இந்த சூழலில் ஜெயிலர் படம் பற்றி அவர் கொடுக்கும் விமர்சனத்திற்காக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். அதன்படி இன்று அதிகாலையே தனது யூடியூப் சேனலில் ஜெயிலர் விமர்சனத்தை கொடுத்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

அதன்படி ஜெயிலர் படம் 7 வயது குழந்தை யூடியூப் சேனல் தொடங்குவதில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு எங்கெங்கயோ கதை நகர்ந்து விட்டது. ஓய்வுபெற்ற ஜெயிலராக இருக்கும் ரஜினி, போலீஸ் அதிகாரியாக இருக்கும் தனது மகன் கடத்தி கொலை செய்யப்பட்டுள்ளான் என்று தெரிந்தவுடன் அவர்களை பழிவாங்க தொடங்குகிறார்.

Also Read : ஜெயிலர் விமர்சனத்திற்கு தயாரான ப்ளூ சட்டை.. ஒத்த வரியில் கொடுத்த கமெண்ட், நெல்சா மண்ட பத்திரம்

மேலும் ஆரம்பத்தில் வில்லனாக காண்பிக்கப்பட்ட மோகன்லால், ஜாக்கி ஷெராப், சிவராஜ்குமார் அதன் பிறகு நல்லவர்களாக காட்டப்படுகிறார்கள். வில்லனாக இருந்தாலும் நல்ல வில்லன் என்பது எப்படி நியாயமாகும். பாம்பில் நல்ல பாம்பு என்பது போல நெல்சன் கதையை உருட்டி உள்ளார். மேலும் பான் இந்தியா படம் என்பதற்காக இந்த பிரபலங்களை ஜெயிலர் படத்தில் நடிக்க வைத்திருக்கிறார்கள்.

பாகுபலி, புஷ்பா, கே ஜி எஃப் படங்களை பான் இந்தியா மொழி என்று சொன்னாலும் தங்கள் மொழிக்கான நியாயத்தை படத்தில் செய்திருப்பார்கள். மேலும் இந்தப் படத்தில் மற்ற மொழி பிரபலங்கள் நடித்திருந்தாலும் அவர்களது மொழியில் தான் பேசுகிறார்கள். அதுவும் இரண்டே வரியில் டயலாக் முடித்து விடுகிறது.

Also Read : ப்ளூ சட்டைக்கு கொலை மிரட்டல்.. உயிர் பயத்தில் ரஜினிக்கு வைத்த கோரிக்கை என்ன தெரியுமா?

இந்த படத்தைப் பார்க்கும்போது ரசிகர்கள் ஐசியுகே சென்று விடுவார்கள். தட்டி எழுப்பினாலும் அதன் பிறகு கோமாவில் தான் இருப்பார்கள் என பங்கமாக கலாய்த்து இருக்கிறார் ப்ளூ சட்டை. மேலும் புலம்பலை தான் பாடலாக ஜெயிலர் படத்தில் வைத்துள்ளார்கள். தமன்னாவின் காவாலா பாடல் நன்றாக இருந்தாலும் அதையும் முழுசாக கேட்க முடியாத அளவுக்கு நடுவில் காட்சிகள் வைத்து கெடுத்து விட்டனர்.

மேலும் ரஜினிக்கு இயக்குனர் கிடைக்காத நிலையில் கிடைத்த இயக்குனர் நெல்சன் வைத்து படத்தில் நடித்துள்ளார். அதேபோல் நெல்சனுக்கு ஹீரோ கிடைக்காத நிலையில் கிடைத்த ஹீரோவான ரஜினியை வைத்து இந்த படத்தை எடுத்திருக்கிறார். மேலும் கதையும் கிடைக்காததால் இருந்த கதையே பட்டி டிங்கரிங் பார்த்து எடுத்து வைத்துள்ளார்கள். இந்த வாரம் ஜெயிலர் படம் மட்டும்தான் வெளியாகி உள்ளதால் கிடைத்த படத்தை ரசிகர்கள் பார்க்கும் போது அவர்களது நிலைமையை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை என ப்ளூ சட்டை மாறன் கூறியிருக்கிறார்.

Also Read : ஐட்டம் பாட்டுக்கு இத்தனை கோடியா.? ஜெயிலர் படத்துக்காக தமன்னா வாங்கிய சம்பளம்

- Advertisement -

Trending News