திருமணத்திற்கு முன்பே உறவிலிருந்த 5 நடிகைகள்.. நயனை விடுங்க இவர்களுக்குள் இப்படி ஒரு பந்தமா.?

Actress Nayanthara: சினிமாவை பொறுத்தவரையில் கிசுகிசுக்கள் என்பது சர்வசாதாரணமாக ஆகிவிட்டது. அதாவது ஒன்றுக்கு மேற்பட்ட படத்தில் சேர்ந்து நடித்தால் அவர்களுக்குள் உறவு இருப்பதாக செய்தி வந்து விடுகிறது. அவ்வாறு நயன்தாராவை பற்றியே பல கிசுகிசுக்கள் வெளியான நிலையில் அவரை தாண்டி திருமணத்திற்கு முன்பே உறவில் இருந்ததாக ஐந்து நடிகைகளை பற்றி செய்தி வெளியாகியிருக்கிறது.

நாகர்ஜுனா, தபு : தமிழில் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை தபு. இந்நிலையில் நாகர்ஜுனா மற்றும் தபு இருவரும் இணைந்து இரண்டு தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்கள். இந்நிலையில் இவர்கள் இருவரும் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து டேட்டிங்கில் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் நாகர்ஜுனா தபு தன்னுடைய நல்ல தோழி என்று ஒரு நேர்காணலில் கூறியிருந்தார்.

Also Read : பாதியிலேயே கழட்டி விட்டு டாட்டா சொன்ன நயன்தாரா.. மொத்த பிளானையும் மாற்றிய லோகேஷ்

ராணா டகுபதி, திரிஷா : அழகு பதுமையாக இருக்கும் திரிஷா பல காதல் சர்ச்சைகளில் சிக்கி உள்ளார். அந்த வகையில் பாகுபலி நடிகர் ராணா உடன் நெருங்கி பழகி வந்த திரிஷா சில காலம் டேட்டிங் செய்து வந்தார். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்த்த நிலையில் திடீரென பிரிந்து விட்டனர். அதன் பிறகு ராணா வேறு ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

சித்தார்த், ஸ்ருதிஹாசன் : சித்தார்த் சமந்தா, திரிஷா போன்ற நடிகைகளுடன் கிசுகிசுவில் சிக்கி இருந்தார். இதைத்தொடர்ந்து கமலின் மூத்த மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசனுடன் சித்தார்த் நடித்திருந்தார். அப்போது இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில் அதன் பிறகு பிரச்சினையால் பிரிந்து விட்டனர்.

Also Read : எந்த ஹீரோவுமே வேண்டாம், தனி ஆளா கெத்து காட்டிய நயன்தாரா.. கோடியில் வசூலை குவித்த 4 படங்கள்

அஞ்சலி, ஜெய் : கற்றது தமிழ் படத்தின் மூலம் அறிமுகமான அஞ்சலி ஜெயுடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாக தகவல் வெளியானது. அதாவது எங்கேயும் எப்போதும் படத்தில் இருவரும் ஒன்றாக நடித்திருந்தனர். இந்நிலையில் இருவரும் லிவிங் டு கெதரில் இருந்ததாக கூறப்பட்ட நிலையில் அதன் பிறகு இருவரும் பிரிந்து விட்டதாக தகவல் வெளியானது.

அமிதாப் பச்சன், ரேகா : பாலிவுட்டில் பிரபல நட்சத்திரங்களான ரேகா மற்றும் அமிதாப் பச்சன் இருவரும் சில படங்களில் ஒன்றாக நடித்திருந்தனர். மேலும் அந்த காலத்தில் அதிகம் பேசப்பட்ட காதல் கதைகளில் இவர்களது காதலும் ஒன்று என்று கூறலாம். அதோடு மட்டுமல்லாமல் இருவரும் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாகவும் அப்போது கிசுகிசுக்கள் வெளியானது.

Also Read : அவர மாதிரி ஒரு ஜென்டில்மேன காமிங்க இப்பவே தாலி கட்டிக்கிறேன்.. திரிஷாவுக்கு இருக்கும் பேராசை!

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்