டாப் ஹீரோக்களுக்கு தங்கையாக நடித்து கேரியரை தொலைத்த 5 ஹீரோயின்கள்.. பரிதாபமான நிலையில் கீர்த்தி சுரேஷ்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகள் அதிக அளவில் ஆசைப்படுவது முன்னணி ஹீரோயினாக வலம் வர வேண்டும் என்பதுதான். அதற்காகவே அவர்கள் முயற்சி செய்து டாப் ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்து வருவார்கள். அப்படி ஹீரோயின் ஆன பிறகு சில நடிகைகள் எதைப் பற்றியும் யோசிக்காமல் முன்னணி நடிகர்களுடன் தங்கையாக நடித்திருப்பார்கள். அப்படி நடித்த நடிகைகளை பற்றி பார்க்கலாம்.

ஐஸ்வர்யா ராஜேஷ்: பாண்டிராஜ் இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு நம்ம வீட்டு பிள்ளை குடும்பக் கதையை மையமாக வைத்து வெளிவந்தது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ், அணு இம்மானுவேல், சமுத்திரக்கனி, சூரி மற்றும் பாரதிராஜா ஆகியோர் நடிப்பில் வெளிவந்தது. இதில் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருப்பார். ஆனால் பொதுவாக இவர் ஹீரோயினாக நடித்து வருகிறவர். அப்படி இருக்கையில் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நடிப்பதற்கு ஒத்துக்கொண்டு இவர்களின் கதாபாத்திரத்தை பார்ப்பவர்களுக்கு உண்மையாகவே இவர்கள் அண்ணன் தங்கச்சி என்று நினைக்கும் படி இவர்கள் நடிப்பு இருக்கும். ஆனால் இந்த கதாபாத்திரத்திற்கு பிறகு இவருக்கு வெற்றி படமாக எதுவும் அமையவில்லை.

Also read: முழு பூசணிக்காயை சோற்றில் போட்டு மறைக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்.. இதெல்லாம் ஒரு பொழப்பா

சரண்யா மோகன்: மோகன் ராஜா இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு வேலாயுதம் திரைப்படம் வெளிவந்தது. இதில் விஜய், ஜெனிலியா, ஹன்சிகா, சந்தானம் மற்றும் சரண்யா மோகன் ஆகியோர் நடித்திருப்பார்கள். இப்படத்தில் விஜய்க்கு தங்கையாக சரண்யா மோகன் நடித்திருப்பார். இந்த படத்தில் நடிப்பதற்கு முன்னரே சில படங்களில் நடிகையாக நடித்தவர். மேலும் இந்த படத்திற்குப் பிறகு மூன்று படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் அந்தப் படங்கள் எதுவும் இவர் பெயர் சொல்லும் படியாக அமையவில்லை. பின்பு திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

லட்சுமி மேனன்: இயக்குனர் சிவா இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு வேதாளம் திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் அஜித், லட்சுமி மேனன் மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடித்திருப்பார்கள். இதில் அஜித்திற்கு தங்கையாக லட்சுமிமேனன் நடித்திருப்பார். இந்தப் படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் லட்சுமி மேனனின் நடிப்பு என்றே சொல்லலாம். ஆனால் இந்த படத்திற்கு பிறகு சினிமாவில் இவர் காணாமல் போய்விட்டார்.

Also read: இதனால தான் லட்சுமி மேனன் பீல்ட் அவுட் ஆனாங்க.. எவ்வளவோ எச்சரித்தும் கேட்காமல் ஒப்புக்கொண்ட கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ்: இயக்குனர் சிவா இயக்கத்தில் 2021 ஆம் ஆண்டு குடும்பக் கதையாக அண்ணாத்த திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்தனர். இதில் ரஜினிக்கு, கீர்த்தி சுரேஷ் தங்கையாக நடித்திருப்பார். ஆனால் இவர் ஹீரோயினாக முன்னணி நடிகர்களுடன் நடித்துக் கொண்டிருந்தார். ரஜினி படம் என்று சொன்னதும் உடனே யோசிக்காமல் தங்கையின் கதாபாத்திரத்தில் நடித்து ஓரளவுக்கு பெயர் வாங்கினார். ஆனால் இந்த படத்திற்கு பிறகு இவருடைய ஹீரோயின் என்ற மாஸ் குறைந்து விட்டது. இதனால் தமிழில் படம் வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்து வருகிறார்.

ஜோதிகா: இயக்குனர் சகாப்தம் சரவணன் இயக்கத்தில் 2021 ஆம் ஆண்டு உடன்பிறப்பே என்ற திரைப்படம் வெளிவந்தது. இதில் சசிகுமார், ஜோதிகா, சமுத்திரக்கனி ஆகியோர் நடித்தனர். இப்படத்தில் சசிகுமார் தங்கையாக ஜோதிகா நடித்திருப்பார். இந்தப் படத்தில் இவர்களுடைய அண்ணன் தங்கை சென்டிமென்ட் பார்க்கும் பொழுது கிழக்கு சீமை படத்தில் விஜயகுமார், ராதிகாவை நமக்கு ஞாபகப்படுத்தும் அளவிற்கு இவர்கள் நடிப்பு எதார்த்தமாக இருந்திருக்கும்.

Also read: சூர்யா போல் தேவ், ஜோதிகா போல் தியா.. நக்மாவுடன் திருமண கொண்டாட்டத்தில் இருக்கும் புகைப்படங்கள்

- Advertisement -spot_img

Trending News