Connect with us
Cinemapettai

Cinemapettai

Photos | புகைப்படங்கள்

சூர்யா போல் தேவ், ஜோதிகா போல் தியா.. நக்மாவுடன் திருமண கொண்டாட்டத்தில் இருக்கும் புகைப்படங்கள்

சூர்யா மற்றும் ஜோதிகாவின் குழந்தைகள் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

நட்சத்திர ஜோடிகளான சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் பிரபலங்களின் நிகழ்ச்சிகள் மற்றும் குடும்ப விழாக்களில் கலந்து கொள்ளும் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி ட்ரெண்ட்டாகி வரும். சமீபகாலமாக இவர்களின் குழந்தைகள் புகைப்படம் வெளியாகி வருகிறது.

அந்த வகையில் ஜோதிகா குடும்பத்தினரின் திருமண விழாவில் இவர்கள் கலந்து கொண்டுள்ளனர். அதுமட்டுமின்றி இந்த விழாவில் நடிகை நக்மாவும் பங்கு பெற்றிருந்தார். ஒரு காலகட்டத்தில் டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்த நக்மா இப்போது அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார்.

Also Read : சூர்யா 42 படத்தின் வித்தியாசமான லுக்.. பத்து வயது குறைந்த இளமையான வைரல் புகைப்படம்

மேலும் சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தற்போது வரை நக்மா திருமணம் செய்து கொள்ளாமல் உள்ளார். ஜோதிகா சினிமாவில் நுழைய முக்கியமான காரணமும் நக்மா தான். இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு நடிக்காமல் இருந்த ஜோதிகா தற்போது படங்களில் நடித்து வருகிறார்.

அதுமட்டுமின்றி பாலிவுட்டிலும் பல வருடங்கள் கழித்து தற்போது ஜோதிகா கால் பதித்துள்ளார். சினிமாவில் அடுத்தடுத்த உயரத்தை அடைந்து வரும் ஜோதிகா குடும்பத்திற்காகவும் நேரம் செலவிட்டு வருகிறார். இந்நிலையில் இந்த திருமண புகைப்படங்களில் தியா மற்றும் தேவ் இருவரும் ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு வளர்ந்துள்ளார்கள்.

ஜோதிகா குழந்தைகளுடன் நக்மா

jyothika-nagma

Also Read : விஜய், சூர்யாவை கலாய்த்த காண்ட்ராக்டர் நேசமணி வைரல் போஸ்டர்.. லியோவுக்கு வந்த சோதனை

சூர்யாவை போலவே அச்சு அசலாக தேவ் உள்ளார். அதேபோல் ஜோதிகாவின் ஜெராக்ஸாக தியா உள்ளார். இப்போதே ஹீரோயின் ரேஞ்சுக்கு தியா உள்ளதால் சினிமாவில் வர வாய்ப்புள்ளதா என அவரது ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்தப் புகைப்படங்கள் சூர்யா மற்றும் ஜோதிகா ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

குடும்பத்துடன் திருமண விழாவில் நக்மா

nagma

சூர்யா போல் தேவ், ஜோதிகா போல் தியா

jyothika-family-photo

Also Read : தேசிய விருது வாங்கியதில் இருந்தே நேரம் சரியில்லை.. சூர்யாவின் வாழ்க்கையில் விளையாடும் விதி

Continue Reading
To Top