நடிப்பில் கல்லா கட்ட முடியல, பிசினஸில் இறங்கிய 5 ஹீரோக்கள்.. கெஞ்சி கூப்பிட்டும் நடிக்க மறுத்த நெப்போலியன்

பொதுவாக நடிகர்களின் படங்கள் ஹிட்டானதும் அவர்கள் தொடர்ந்து நடித்து பெரிய அளவில் புகழ்பெற்ற நடிகர்களாக வளர்ந்து வருவார்கள். ஆனால் சில நடிகர்கள் கொஞ்சம் சம்பாதித்த பிறகு சினிமாவிற்கு முழுக்கு போட்டுவிட்டு அந்த பணத்தை காரியத்துடன் பிசினஸில் போட்டு இப்பொழுது பெரிய லாபத்தை பார்த்து வருகிறார்கள். அப்படி சினிமாவை உதறி தள்ளிய 5 ஹீரோக்களை பற்றி பார்க்கலாம்.

வினித்: வினித் சினிமாவில் நுழைந்ததற்கு முக்கிய காரணமே அவருக்கு நடனத்தின் மேல் இருந்த அளவு கடந்த பற்று .  இவர் மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழிகளில் கிட்டத்தட்ட 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடித்த ஆவாரம்பூ திரைப்படத்தில் சிறந்த புதுமுகத்திற்கான விருதை பெற்றார். மேலும் இவர் நடித்த காதல் தேசம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக இவருக்கு அமைந்தது. இதனைத் தொடர்ந்து இவர் சில படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். ஆனாலும் நடிப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு இப்பொழுது நடன இயக்குனராக பணிபுரிந்து வருகிறார்.

Also read: சந்திரமுகியில் நடித்த வினித் என்ன ஆனார்.! தற்போதைய நிலை என்ன.?

அப்பாஸ்: நடிகர் அப்பாஸ் தமிழ், தெலுங்கு,,மலையாளம், ஹிந்தி, ஆகிய மொழிகளில் நடித்திருக்கிறார். இவர் தமிழில் காதல் தேசம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். பிறகு விஐபி, பூச்சூடவா, பூவேலி, சுயம்வரம், படையப்பா, மின்னலே, ஆனந்தம் போன்ற வெற்றி படங்களில் தொடர்ந்து நடித்து பாராட்டை பெற்றார். பின்பு நடிப்பு வாழ்க்கையை 2015ல் விட்டுவிட்டு நியூசிலாந்தில் தற்போது பிசினஸ் செய்து வருகிறார்.

யுவ கிருஷ்ணா: நடிகர் யுவ கிருஷ்ணா பூர்வீகம் திருவனந்தபுரம். இவர் மாடலிங் மற்றும் மனநல மருத்துவராக பணியாற்றினார். பின்னர் தமிழில் சுந்தர் சி இயக்கத்தில் தக்கத்திமிதா படத்தில் அறிமுகமானார். அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இவர் அடுத்தடுத்த படங்களில் நடித்து நடிகராக வலம் வருவார் என்று எதிர்பார்த்த நிலையில் நடிப்பு வேண்டாம் என்று நினைத்து இப்பொழுது பிசினஸ் செய்து வருகிறார்.

Also read: அப்பாஸ் தவறவிட்ட சூப்பர் ஹிட் படம்.. மேனேஜரின் சூழ்ச்சியால் விஜய்க்கு அடித்த லக்

ஹம்சவர்தன்: இவர் சினிமாவில் வெற்றி பெறுவதற்கு மிகப்பெரிய முயற்சியை எடுத்து வந்தார். இவர் நடிப்பில் வெளியான புன்னகை தேசம் படம் மட்டுமே இவர் நடித்ததில் வெற்றி பெற்றது. அதன் பின் இவரின் படங்கள் அனைத்தும் தோல்வியை சந்தித்தது. இதனால் சினிமாவை விட்டு ஒதுங்கி தற்போது மலேசியாவில் ஹோட்டல் நடத்தி வருகிறார்.

நெப்போலியன்: நெப்போலியன் நடிக்க ஆரம்பித்ததில் இருந்து இப்பொழுது வரை தமிழ் ரசிகர்களுக்கு மிகப் பிடித்த ஹீரோவாக இருந்து வருகிறார். இவர் நடித்த கிழக்கு சீமையிலே, சீவலப்பேரி பாண்டி, விருமாண்டி, தசாவதாரம், போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார். ஆனாலும் சில காரணங்களால் சினிமாவை விட்டுவிட்டு அமெரிக்காவில் செட்டிலாகி சொந்தமாக தொழில் செய்து வருகிறார். ஆனாலும் இவரின் நடிப்பு திறமையை பார்த்து பல இயக்குனர்கள் கெஞ்சி கூப்பிட்டும் இவர் நடிக்க மறுத்துவிட்டார். இன்னமும் இவர் வருகைக்காக பல இயக்குனர்கள் மற்றும் முன்னணி நடிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Also read: விஜய்யுடன் 15 வருட பகை.. நக்கலாக குத்தி காட்டிய நெப்போலியன்

Next Story

- Advertisement -