நடிப்பில் சிவாஜியை தூக்கி சாப்பிட்ட நடிகர்.. தேசிய விருது மறுக்கப்பட்ட அவலம்!

நன்றாக நடிக்க தெரிந்த பல நடிகர் நடிகைகளுக்கு சரியான அங்கீகாரமும், விருதுகளும் கிடைப்பதில்லை என்ற வேதனை ரசிகர்களுக்கும், சினிமா பிரபலங்களுக்கும் உண்டு. மக்களால் அதிகம் ரசிக்கப்படுபவர்கள் பலர் எந்த மேடையிலும் அவ்வளாக அங்கீகரித்து விருது வாங்குவதில்லை.

‘நடிகர் திலகம்’ சிவாஜி கணேசன், நடிப்புக்கே ஒரு டிக்ஸ்னரி என்று சொல்லலாம். சினிமாவை தேடி வந்த பல ஜாம்பவான்கள் இவருடைய பராசக்தி, கட்ட பொம்மன் வசனங்களை பேசி தான் சினிமா வாய்ப்புகளையே வாங்கி இருக்கிறார்கள். சிவாஜியினால் ஈர்க்கப்பட்டு சினிமாவுக்கும் வந்து இருக்கிறார்கள்.

Also Read: பாரதிராஜா சிவாஜியை வைத்து செதுக்கிய 3 படங்கள்.. கண்ணீர் விட்டுக் கதறிய தாய்மார்கள்

சிவாஜி, ‘தாதா பால்கே’ ‘செவாலியர்’ விருது வாங்கி இருக்கிறார். எகிப்தில் நடைபெற்ற விருது விழா ஒன்றில், சிறந்த நடிகருக்கான விருது வாங்கி இருக்கிறார். லாஸ் ஏஞ்சல்ஸ் பத்திரிக்கை இவரை தென்னிந்தியாவின் மார்லன் பிராண்டோ என குறிப்பிட்டது. இத்தனை கௌரவத்துக்கும் உரிய சிவாஜிக்கு நம் மத்திய அரசின் தேசிய விருது கிடைக்கவில்லை என்பது ஆச்சரியமே.

சிவாஜியை போலவே அந்த கால நடிகர்களில் அங்கீகரிக்கப்படாதவர் என்றால் அது முத்துராமன் கூட. நடிகர் திலகம் சிவாஜியை போல இவர் நவரச திலகம் என்று அழைக்கப்பட்டார். முன்னணி இயக்குனர்களாக இருந்த ஸ்ரீதர், கே பாலச்சந்தரின் படங்களில் அதிகமாக நடித்திருக்கிறார்.

Also Read: சிவாஜிக்கு பட்ட நன்றி கடனால் எம்ஜிஆரை ஒதுக்கிய தயாரிப்பாளர்.. வழிவிட்டு வாழவைத்த புரட்சித்தலைவர்

சேவா ஸ்டேஜ் நாடக்குழுவில் இருந்து சினிமாவுக்கு வந்தவர். அப்போதைய சினிமா ரசிகர்கள் முத்துராமன் ஆங்கில படங்களில் நடிப்பவர்களை போல் நடிக்கிறார் என்றும், நடிப்பில் சிவாஜியையே தூக்கி சாப்பிட்டு விடுவார் என்றும் பேசி கொள்வார்களாம். பாலிவுட் நடிகர் பால் நியூமென் போல் தோற்றம் கொண்டவர் என்றும் சொல்வார்களாம்.

முத்துராமனின் நடிப்பு மற்றும் வசன உச்சரிப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டது. இவருடைய பல படங்கள் வெள்ளிவிழா கண்டது. அப்போதைய அரசு தேசிய விருதுக்காக பரிந்துரைக்கு கூட உத்தரவு விடவில்லை என்பதுதான் கொடுமை. இத்தனை திறமைகள் இருந்தும் முத்துராமனுக்கு தேசிய விருது கொடுக்கப்படவில்லை.

Also Read: சிவாஜி படங்களில் ‘A’ சர்டிபிகேட் வாங்கிய ஒரே படம்.. முகம் சுளிக்க வைத்த காட்சிகள்

Next Story

- Advertisement -