மாறுபட்ட கிளைமாக்ஸுடன் முடிவடைந்த தெலுங்கு எதிர்நீச்சல்.. கிளைமேக்சில் அடிவாங்கிய குணசேகரன் வெர்சன்

Ethirneechal Telugu version: சன் டிவியின் எதிர்நீச்சல் சீரியல் கடந்த வாரத்தோடு முடிவடைந்து இருக்கிறது. கோலங்கள் சீரியலுக்குப் பிறகு திருச்செல்வம் சீரியல்களில் எதிர்நீச்சல் பெரிய அளவில் வெற்றி பெற்றது. கிட்டத்தட்ட ஒரு சில வருடங்களாக சன் டிவியில் ஒளிபரப்பாகும் எந்த ஒரு சீரியலுமே பெரிய அளவில் ரீச் ஆகவில்லை.

அதள பாதாளத்தில் இருந்த சன் டிவியை எதிர்நீச்சல் சீரியல் தான் மேலே கொண்டு வந்தது. இந்த சீரியலின் பெரிய வெற்றிக்கு காரணமே ஆதி குணசேகரனாக நடித்த மாரிமுத்து தான். இந்தாம்மா ஏய், அம்மா மீனாட்சி தாயி என வெள்ளை வேட்டி சட்டை அணிந்து இவர் கம்பீரமாக பேசுவது இன்று வரை கண் முன் வந்து போகிறது.

சீரியல் பெரிய அளவில் வெற்றியை பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் திடீரென மாரிமுத்து மறைந்து விட்டார். அப்போது இருந்தே எதிர்நீச்சல் சீரியல் அடி வாங்க தொடங்கிவிட்டது. இந்த கேரக்டரில் நடிகர் வேலராமமூர்த்தி நடிக்க வைத்தும் பெரிய அளவில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

இனி வேளைக்கு ஆகாது என சீரியலை முடித்து விட்டார்கள். கடைசி எபிசோடுக்கு முன்பு குணசேகரின் தம்பிகள் திருந்துவது போல் காட்டப்பட்டு இருந்தது. ஆனால் சரியாக கிளைமாக்ஸ் நெருங்கும் நேரத்தில் மீண்டும் அவர்கள் வில்லன்களாக அண்ணனுக்கு சப்போர்ட் பண்ண ஆரம்பித்தார்கள்.

கிளைமேக்சில் அடிவாங்கிய குணசேகரன் வெர்சன்

கிளைமாக்ஸ் காட்சியில் ஆதி குணசேகரனை போலீஸ் கைது செய்வது போல் காட்டப்பட்டிருக்கும். அப்பத்தா மருமகளிடம் இதே போன்ற நிறைய ஆதி குணசேகரன்களை நீங்கள் இந்த சமூகத்தில் எதிர்கொள்ள வேண்டும் என்று பேசி முடித்து இருப்பார்.

ஆனால் தெலுங்கு வர்ஷனில் அண்ணன் கேரக்டரோடு சேர்ந்து மற்ற தம்பிகளும் திருந்தி விடுவது போல் காட்டப்பட்டிருக்கிறது. அது மட்டும் இல்லாமல் மனைவிகளை வேலைக்கு அனுப்பி அவர்களுக்கு டாட்டா காட்டுவது போல் இந்த சீரியலை முடித்து இருக்கிறார்கள்.

நெகட்டிவாக முடித்த தமிழ் சீரியல் வெர்சனை விட, தெலுங்கு கிளைமாக்சிற்கு பெரிய அளவில் ரசிகர்களிடையே வரவேற்பு கிடைத்திருக்கிறது.

Next Story

- Advertisement -