பணத்துக்காக என்ன வேணா செய்வேன்.. ஆபத்தை விலைக்கு வாங்கும் விவாகரத்து நடிகை

Gossip: ஆரம்ப காலத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என நடித்து வந்த விவாகரத்து நடிகை முன்னணி அந்தஸ்து வந்தவுடன் ஏகப்பட்ட பிரச்சனையில் சிக்கினார். ஐந்து எழுத்து நடிகருடன் காதல் பிரேக்கப் என நடிகை சந்திக்காத பிரச்சனைகளே கிடையாது.

அதன் பிறகு வேறு ஒரு நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகை அங்கும் உருப்படியாக வாழ்க்கையை நடத்தவில்லை. சில வருடங்களிலேயே கூலாக விவாகரத்து செய்து சுதந்திர பறவையாக மாறினார்.

அதன் பிறகு எனக்கு நானே ராணி என உச்சகட்ட கவர்ச்சியில் நடிக்க ஆரம்பித்தார். ஆனால் அதுவும் நீடிக்கவில்லை இடையில் சில பிரச்சனைகளை சந்தித்த நடிகை இப்போது மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். ஆனால் வாய்ப்பு தான் கிடைக்கவில்லை.

அதனாலேயே மற்ற நடிகைகளை போல இவரும் சோசியல் மீடியாவில் ஓவர் கிளாமர் புகைப்படங்களை இறக்கி விட்டார். அதற்கு தற்போது பலனும் கிடைத்துள்ளது. ஒரு சில படங்களில் கமிட் ஆகி இருக்கும் நடிகை மாஸ் ஹீரோவுடன் ஜோடி போடவும் தயாரானார்.

விவாகரத்து நடிகையின் பிசினஸ் டீல்

ஆனால் தவளை தன் வாயால் கெடும் என்பது போல சமீபத்தில் நடிகை மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் ஒரு விஷயத்தை பகிரங்கமாக சொன்னார். அதுவே தற்போது அவருக்கு ஆப்பாக முடிந்திருக்கிறது.

நடிகை சொன்னது அத்தனையும் பொய் என பிரபலம் ஒருவர் கூறி அதிர வைத்தார். இதனால் நடிகை இப்போது உச்சகட்ட அதிர்ச்சியில் இருக்கிறார். ஏனென்றால் இந்த சமாச்சாரத்திற்கு பின்னணியில் மிகப்பெரிய பிசினஸ் இருக்கிறதாம்.

பட வாய்ப்பு அவ்வளவாக கிடைக்காத நிலையில் நடிகை சைடு வருமானம் பார்க்க இது போன்ற பிசினஸில் இறங்கி இருக்கிறார். ஆனால் அது அத்தனையுமே ஆபத்தை விலைக்கு வாங்கும் கதைதான்.

இதை அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் எடுத்துச் சொல்லியும் கூட நடிகை கேட்கவில்லையாம். விவரம் புரியாமல் பல பிசினஸில் இறங்கும் நடிகை நிச்சயம் இதனால் பிரச்சினையில் சிக்குவார் என பேசி வருகின்றார்.

அதனாலயே மாஸ் ஹீரோ இவரை படத்தில் இருந்து தூக்கிவிட்டு நம்பர் நடிகையை கமிட் செய்ய சொல்லி விட்டாராம். இதனால் அதிர்ச்சியில் இருக்கும் விவாகரத்து நடிகை அடுத்து என்ன செய்யலாம் என்ற யோசனையில் இருக்கிறாராம்.

தேவையில்லாத பிரச்சனையில் சிக்கும் விவாகரத்து நடிகை

Next Story

- Advertisement -