விண்ணைத்தாண்டி வருவாயா ரேஞ்சுக்கு பில்டப் காட்டும் எழில்.. சிம்பு மட்டும் பார்த்தாரு மனுஷன் நொந்துடுவாரு

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் சினிமா துறையில் சாதிக்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கும் எழில் தற்போது இயக்குனர் ஒரு படத்தை எடுத்து முடித்து அந்தப் படத்திற்கான ப்ரோமோ வீடியோவை தன்னுடைய குடும்பத்தினருக்கு திரையரங்கில் போட்டுக் காட்டுக்கிறார்.

எனவே அந்தப் படம் ரிலீஸ் ஆன பிறகு எழிலுக்கு நல்ல பெயரை பெற்றுத் தரும் என பாக்யாவின் குடும்பத்தினர் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் புதிதாக எடுக்கப்போகும் இன்னொரு படத்திற்கு துணை இயக்குனராக எழிலின் கல்லூரியில் படித்த தோழி தனு சீரியலில் என்ட்ரி கொடுக்கிறார்.

அதற்கான பாக்கியலட்சுமி சீரியலின் ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. இதைப் பார்க்கும்போது விண்ணைத்தாண்டி வருவாயா படத்திலும் இதே போன்று சிம்பு டைரக்டராக இருப்பது போன்றும், சிம்பு கூடவே இன்னொரு துணை இயக்குனராக சிம்புவின் கல்லூரி தோழி வருவது போன்று இருக்கும்.

அதே போன்றே தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் எழில் புதிதாக வந்திருக்கும் தனுவுடன் கடலை போடுவதும் ஜாலியாக பேசி சிரித்து அமிர்தாவை இனிவரும் நாட்களில் வெறுப்பேற்ற போகின்றனர்.

ஏற்கனவே எழில் மீது அமிர்தாவுக்கு காதல் ஏற்பட்டிருக்கும் நிலையில், அவளே தன்னுடைய காதலை எழிலிடம் கூடிய விரைவில் சொல்வதற்கு இந்த ஜானு கதாபாத்திரம் தூண்டுகோலாய் இருக்கப்போகிறது. அப்படி இல்லை என்றால் தன்னை விட ஜானு எழிலுக்கு நல்ல ஜோடியாக இருக்கும் என நினைத்து அமிர்தா எழிலை விட்டு விலகி செல்ல வாய்ப்பிருக்கிறது.

ஆனால் எழில், அமிர்தா தன்னுடைய காதலை ஏற்காத நிலையிலும் அவளை விட்டு விலகாமல் ஆழமான அன்பு வைத்திருப்பதால் எழில் நிச்சயம் அமிர்தாவை குடும்பத்தாரின் சம்மதத்துடன் விரைவில் கரம்பிடிக்க போகிறான்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்