வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

எதிர்நீச்சல் சீரியலுக்கு வச்ச ஆப்பு.. என்ட்ரியானது மெய்சிலிர்க்கூட்டும் புத்தம் புது சீரியல்

டிஆர்பி-யில் மற்ற சேனல்களுக்கு எல்லாம் பயங்கர டஃப் கொடுக்கும் சன் டிவியின் சீரியல்களுக்கு ஆப்பு வைக்கும் வகையில் பிரபல சேனல் ஒன்றின் புத்தம் புது சீரியலின் ப்ரோமோ வெளியாகி பார்க்கும் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்திருக்கிறது.

வழக்கமாக டிஆர்பி ரேட்டிங் லிஸ்டில் டாப் 6 இடங்களை கடந்த சில வாரங்களாக சன் டிவியின் கயல், சுந்தரி, வானத்தைப்போல, எதிர்நீச்சல், இனியா போன்ற சீரியல்கள் பெற்றிருக்கிறது. அதிலும் விஜய் டிவியின் பாக்கியலட்சுமி, பாரதிகண்ணம்மா போன்ற சீரியல்கள் பின்னுக்குத் தள்ளப்படுவதால் பக்கா பிளான் போட்டு புத்தம் புது சீரியலை விஜய் டிவி தரையிறக்கியுள்ளது.

Also Read: சன் டிவியின் டிஆர்பியை ஏற்றிய ‘எதிர்நீச்சல்’ நாயகி நந்தினி.. வலி நிறைந்த ஹரிப்ரியாவின் சொந்த வாழ்க்கை

மகாநதி என பெயரிடப்பட்டிருக்கும் இந்த சீரியலில் 4 பெண் பிள்ளைகள் உள்ளனர். இவர்கள் மலை உச்சியில் நின்று கொண்டு அவரவர் ஆசைகளை வெளிப்படுத்துகின்றனர். அதில் மூத்த பெண் ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற கனவையும், அதைத்தொடர்ந்து இருக்கும் சகோதரி அமெரிக்க மாப்பிள்ளை வேண்டும் என்றும் தன்னுடைய ஆசையை வெளிப்படுத்துகிறார்.

இதில் கடைக்குட்டி மட்டும் தன்னுடைய அப்பா வேண்டும் என்று கதறுகிறார். அதுவரை குடும்பத்தினருடன் பயணித்த அப்பா கதாபாத்திரம், அந்தக் குழந்தை அழுது கொண்டே அப்பா மீண்டும் என்று சொன்னதும் அப்பாவின் ஆவி தான் அவர்களை சுற்றி சுற்றி வருவதாக ப்ரோமோவில் காண்பித்திருக்கின்றனர். இந்த ப்ரோமோவை பார்த்த பலருக்கும் சீரியலை குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.

Also Read: 2022 ஆம் ஆண்டின் டாப் 10 சீரியல்கள்.. இந்த ஆண்டு முழுவதும் டஃப் கொடுத்த ஒரே சீரியல்

அத்துடன் சமீபத்தில் துவங்கப்பட்ட சன் டிவியின் எதிர்நீச்சல் மற்றும் இனியா போன்ற சீரியல்களில் வித்தியாசமான கதைக்களத்தை கொண்டதால் சீக்கிரமே ரசிகர்களை கவர்ந்தது. அதேபோன்று விஜய் டிவியும் அப்பா சென்டிமென்ட் வைத்து டிஆர்பி-யில் மீண்டும் விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என்று வெறிகொண்டு காத்திருக்கிறது.

அத்துடன் விஜய் டிவியின் பாரதிகண்ணம்மா மற்றும் நம்ம வீட்டு பொண்ணு போன்ற 2 சீரியல்களும் கிளைமாக்ஸில் இருப்பதால் இந்த சீரியல்கள் விரைவில் நிறைவடைந்து அதே நேரத்தில் மகாநதி சீரியலை ஒளிபரப்பு செய்யப் போகின்றனர். அத்துடன் மகாநதி சீரியலில் அப்பாவாக பருத்திவீரன் திரைப்படத்தின் மூலம் பிரபலமான சரவணன் நடித்திருப்பதால் இந்த சீரியலுக்கு கூடுதல் பலம் கிடைத்திருக்கிறது. எனவே விரைவில் துவங்கப்படும் மகாநதி சீரியல் சின்னத்திரை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

Also Read: டிஆர்பி-யில் டாப் 6 இடங்களை ஆக்கிரமித்த ஒரே சேனல்.. புத்தம் புது சீரியல்களால் பின்னுக்குத் தள்ளப்பட்ட பிரபல சீரியல்கள்

- Advertisement -

Trending News