ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

விஜயாவிடம் தொக்காக மாட்டப் போகும் மீனா.. முத்துவின் சண்டையை குடும்பத்துடன் குதூகலமாக கொண்டாடும் ரோகிணி

Sirakadikkum Asai: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், ரோகிணி பற்றிய விஷயங்கள் முத்துவின் குடும்பத்திற்கு தெரிய வரும் என்று பார்த்தால் அதற்கு எதிர் மாறாக மீனாவுக்கு பிரச்சனை வரும் மாதிரி காட்சிகள் அமைந்து வருகிறது. அதாவது முத்துவின் நண்பர் காருக்கு டியூ கட்டுவதற்கு வைத்திருந்த பணத்தை தான் முத்து அப்பாவிற்கு மூச்சு திணறல் வந்த பொழுது கொடுத்து உதவி செய்திருந்தார்.

அடுத்து முத்துவின் நண்பரிடம் பணத்தை கரராக வசூலிப்பதற்காக ரவுடி கும்பல் வந்து ஏறுக்கு மாறாக பேசி கைகலப்பாக முடிந்து விட்டது. அத்துடன் மீனாவின் தம்பியும் என் நண்பனை நீ எப்படி அடிப்பாய் என்று கை நீட்டி விட்டார். இந்த நேரத்தில் வந்த முத்து எல்லாத்தையும் அடித்து விட்டார். அப்பொழுது முத்துவின் தம்பி மாமா என்று கூட பார்க்காமல் சட்டையை பிடித்து கோபமாக பேசி விட்டார்.

இதனைப் பார்த்த முத்து, ஏற்கனவே அம்மாவிடமிருந்து பணத்தை திருடி திருட்டு வேலையை பார்த்து வரும் கோபத்தில் இருந்ததால் மொத்த கோபத்தையும் மீனாவின் தம்பியிடம் காட்டி கையை முறுக்கி விட்டார். பிறகு வீட்டிற்கு போன முத்துவின் தம்பி கை வலியால் துடித்ததால் மருத்துவமனைக்கு அம்மா கூட்டிட்டு வருகிறார். அங்கே வந்த மீனாவும் தம்பி நிலைமையை பார்த்து ரொம்பவே வருத்தமாகிறார்.

Also read: 300 எபிசோடை வெற்றிகரமாக கடந்த சிறகடிக்கும் ஆசை சீரியலின் ஆட்டநாயகன்.. முத்துவிற்கு அடித்த ஜாக்பாட்

இதற்கு இடையில் நடந்த விஷயத்தை மீனாவிடம் தெரியப்படுத்தி விடு என்று முத்துவின் நண்பர் கூறுகிறார். ஆனால் மீனாவிற்கு இந்த விஷயம் தெரிந்தால் ரொம்பவே வேதனைப்படுவார் அதனால் சொல்ல வேண்டாம் என்று முத்து மறைத்து விடுகிறார். அடுத்ததாக மீனா, முத்துவிற்கு ஃபோன் பண்ணி தம்பிக்கு அடிபட்டுவிட்டது ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கிறோம் வாருங்கள் என்று கூப்பிடுகிறார்.

அதற்கு முத்து எனக்கு வேலை இருக்கிறது நீயே பார்த்துக்கோ என்று கோபமாக பேசி போனை வைத்து விடுகிறார். பிறகு வீட்டிற்கு வந்த மீனா, முத்துவிடம் நீங்கள் நடந்து கொண்டது கொஞ்சம் கூட சரியில்லை. என் தம்பிக்கு ஏதாவது ஒரு பிரச்சினை என்றால் நீங்கதான் முதலில் வருவீர்கள் என்று எதிர்பார்த்தேன் என சொல்கிறார். அதற்கு முத்து அவன் ஒரு வெட்டி பையன் ஊதாரித்தனமாக சுற்றுகிறான். அவனுக்கு என்ன ஆனா எனக்கு என்ன என்று மீனாவிடம் சொல்கிறார்.

இப்படி இவர்களுடைய பேச்சு சண்டை ஆரம்பமாகும் அளவிற்கு போய்விட்டது. இதையெல்லாம் வேடிக்கை பார்த்து விஜயா, ரோகிணி, சுருதி மற்றும் மனோஜ் சந்தோசமாக பேசிக் கொள்கிறார்கள். அதிலும் விஜயா இதை தான் நான் எதிர்பார்த்தேன். இப்பதானே சண்டை ஆரம்பித்திருக்கிறது இன்னும் போகப்போக பூகம்பமாக வெடிக்கப் போகிறது என்று சொல்கிறார். ஆக மொத்தத்தில் விஜயாவிற்கு மீனாவை பற்றி குறை சொல்ல ஒரு விஷயம் தொக்காக கிடைத்துவிட்டது.

Also read: முத்துவிடம் கையும் களவுமாக சிக்கப் போகும் மச்சான்.. விஜயாவிடம் ஒத்து ஊதும் ரோகிணி, மீனாவிற்கு வரும் பிரச்சினை

- Advertisement -

Trending News