முடிவுக்கு வரும் எதிர்நீச்சல், கெடுவைத்த மாறன்.. எப்பவும் திருந்தாத குணசேகரன், லீக்கான கிளைமேக்ஸ்

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில், குணசேகரன் வீட்டு மருமகளுக்கு விடிவு காலம் பிறந்து விட்டது என்பதை நோக்கி சொந்தக் காலில் நின்னு ஜெயிக்க ஆரம்பித்து விட்டார்கள். அந்த வகையில் ரேணுகா பார்ட்னர்ஷிப் போட்டு அவருடைய பரதநாட்டிய கிளாசை ஆரம்பிக்கப் போகிறார். இதன் மூலம் வருகிற லாபத்தில் ஜெயிப்பது போல் கதை வரப்போகிறது.

கடைசி வரை திருந்தாத குணசேகரன்

அதே மாதிரி ஜனனி சக்தி வேலை பார்க்கும் ஆஃபீஸ் ஜனனியின் திறமையான புத்தியை பார்த்து அந்த ஆபீசை வாங்கி ரன் பண்ணும் அளவிற்கு கதை மாறப்போகிறது. அத்துடன் நந்தினி ஆசைப்பட்ட மாதிரி மிளகாய் கம்பெனி பிசினஸை வெற்றிகரமாக துவங்கப் போகிறார். இதனைத் தொடர்ந்து ஈஸ்வரியும் குழந்தைகளுக்கு மோட்டிவேஷனாக பேச்சாளராக அவருடைய பணியை தொடங்கப் போகிறார்.

இப்படி குணசேகரனிடம் சவால் விட்ட நான்கு மருமகளும் சொந்த காலில் நின்னு வாடி வாசலை தாண்டி முன்னேற போகப் போகிறார்கள். ஆனால் இதையெல்லாம் தடுக்கணும் என்று நினைத்த குணசேகரன் கடைசி வரை தோற்றுப் போய் நிற்கப் போகிறார். அத்துடன் தர்ஷினி, தன்னை கடத்தியது குணசேகரன் தான் என்கிற உண்மையை எல்லாரிடமும் சொல்லிவிட்டார்.

ஆனாலும் உண்மை தெரிந்த பிறகு யாராலும் ஏதும் பண்ண முடியாமல் அமைதியாக தான் இருக்கிறார்கள். அடுத்து ஜான்சி ராணிக்கு முடிவு கட்டும் விதமாக குணசேகரன் பணக்கட்டை கொடுத்து அவருடைய சாப்ட்ரை முடித்து விட்டார். மேலும் ஆதிரை ஆசப்பட்ட மாதிரி அவருடைய கல்யாணம் அருண் உடன் நடக்கப்போகிறது.

இதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்று குணசேகரன் பல தில்லாலங்கடி வேலையை பார்த்து குளறுபடி பண்ண போகிறார். ஆனாலும் இதில் அவரால் ஒன்னும் பண்ண முடியாமல் தோற்றுப் போய் நிற்கப் போகிறார். இப்படி எல்லாம் கதை ஒரு பக்கம் அடுத்தடுத்து வர இருக்க நிலையில், முன்னாடி மாதிரி இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங் கை கொடுக்கவில்லை.

அதனால் தான் சன் தொலைக்காட்சியில் இருக்கும் கலாநிதி மாறன் இந்த நாடகத்தை முடித்து விடுங்கள் என்று கெடு வைத்துவிட்டார். அந்த வகையில் வருகிற ஜூன் மாதம் எட்டாம் தேதி இந்த நாடகம் கிளைமேக்ஸ்-க்கு தயாராகிவிட்டது. இதனை தொடர்ந்து இனி வரும் ஒவ்வொரு எபிசோடும் அவசர அவசரமாக கதையை கொண்டு வரப் போகிறார்கள்.

கிளைமாக்ஸ் காட்சியானது ஆதிரை கல்யாணத்தில் தான் முடியப்போகிறது. ஆதிரை சந்தோஷத்தை கெடுக்க வேண்டும் என்று நினைத்த குணசேகரன் கடைசி வரை திருந்தாத நிலையில் நான் இப்படி தான் இருப்பேன் என்று அவருடைய ஆணவத்தை காட்டி செய்த தவறுகளுக்கு தண்டனை அனுபவிக்கும் விதமாக ஜெயிலுக்கு போவதாக கதை நகரப் போகிறது.

எதிர்நீச்சல் சீரியலின் முந்தைய சம்பவங்கள்

- Advertisement -