செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

மகனை கை கழுவிய ஈஸ்வரி.. கதறிக் கூப்பாடு போட்ட தர்ஷன், சூடு பிடித்த எதிர்நீச்சல்

சன் டிவியில் ஒளிபரப்பாகும் ப்ரைம் டைம் சீரியல் ஆன எதிர்நீச்சல் சீரியல் நாளுக்கு நாள் சூடு பிடித்து ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட சீரியல்களில் ஒன்றாக உள்ளது. ஆண்களின் ஆதிக்க பிடியிலிருந்து தப்பிக்க நினைக்கும் பெண்களின் சுதந்திரத்தை கதையாக கொண்டு அமைந்துள்ளது.

தர்ஷனின் கல்லூரிக்கு அம்மா என்ற முறையில் ஈஸ்வரி செல்கிறார். ஆனால் அங்கு தர்ஷனின் பேராசிரியர் அவர் மேல் அடுக்கடுக்கான புகார்களை முன் வைக்கிறார். பெண்களை இழிவாக பார்ப்பதும் பேசுவதும் போன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும்.

Also Read: சீரியல்ல தான் குடும்ப குத்து விளக்கு.. வாய்ப்புக்காக கிளாமரில் குதித்த சன் டிவி பிரபலம்

பெண்கள் என்றால் திருமணம் செய்து கொண்டு அடிப்படையில் தான் கிடக்க வேண்டும் என்ற எண்ணம் தர்ஷனை நீ எண்ணத்தில் ஊறிப் போய் இருக்கிறது என்பதை பேராசிரியர் தர்ஷனின் அம்மாவிடம் சொல்கிறார். பிறகு மூவரும் பிரின்சிபலை சந்திக்க செல்கின்றனர்.

தர்ஷனின் பேராசிரியர், எச்ஓடி, பிரின்சிபல் என அனைவரும் தர்ஷனின் மீது அடுக்கடுக்கான புகார்களை முன்வைக்கின்றனர்.  இதனை கேட்டுக் கொண்டிருந்த ஈஸ்வரி தர்ஷன் வளர்ந்த சூழ்நிலை அப்படி அதற்கு நானும் ஒரு வகையில் காரணம் தான் என கூறினார்.

Also Read: 2022 ஆம் ஆண்டின் டாப் 10 சீரியல்கள்.. இந்த ஆண்டு முழுவதும் டஃப் கொடுத்த ஒரே சீரியல்

இன்றைய தலைமுறைக்கு இப்படிப்பட்ட மாணவர் தேவையில்லை என்றும் கல்லூரியில் இருந்து தர்ஷனை நீக்கி விடுங்கள் என்று தாய் என்ற ஸ்தானத்தில் மகனை கைகழுவி விட்டார் ஈஸ்வரி. அதன் பிறகு தர்ஷன் ஈஸ்வரியிடம் கதறிக்கூப்பாடு போட்டு கெஞ்சுகிறார். இதனை கவனித்த பேராசிரியர் ஈஸ்வரியை பாராட்டுகிறார்.

இது ஒரு புறம் இருக்க சக்தி ஜனனி சந்திப்பது போல் காட்சி அமைந்துள்ளது. அதில் சக்தி ஜனனி இடம் கௌதமை சந்தித்ததற்கு விளக்கம் கொடுக்கப் போகிறாயா என்று நிற்க வைத்து கேள்வி கேட்கிறார். இதற்கு ஜனனியும் சரியான பதிலளிக்க கொடுக்கப் போகிறார். இப்படி ஒவ்வொரு நாளும் எதிர்நீச்சல் சீரியல் சூடு பிடிப்பதால், இது ரசிகர்களின் விருப்பமான சீரியலாகவே மாறி உள்ளது.

Also Read: பொண்டாட்டி கூட நடிக்க நம்பர் ஒன் சீரியலை விட்டு விலகிய கணவன்.. விஜய் டிவி துரத்திவிட்டும்

- Advertisement -

Trending News