ஃபுல் போதையில் தான் கதை எழுதுவேன்.. ராஜமவுலி போல் கொண்டாடிடும் டைரக்டரின் தலைக்கணம்

Director Prasanth Neel’s open talk about his habits: “வயலன்ஸ் லைக் மீ” என்று தான் இயக்கிய அத்தனை படங்களிலும் வயலன்சால் வெற்றியை பந்தாடி விட்டார் கேஜிஎப் இயக்குனர். நான் இயக்கிய அத்தனை படங்களுமே பாக்ஸ் ஆபிஸ் ஹிட், தன் படத்தின் வசனம் போல் என்னை வெல்ல நினைப்பவன் எவன்? என்று தலைகணத்துடனே தள்ளாடி வரும் இயக்குனரின் ஓபன் டாக்.

மதுப்பழக்கம் என்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பமாகவே இருந்தாலும் செலிபிரிட்டி ஆனவர் அதை ஓபன் ஆக ரசிகர்களிடம் வெளிப்படுத்தும்போது ரசிகர்கள் மத்தியில்  அவரைப் பற்றிய சிந்தனை ஒரு படி குறைந்து தான் போகிறது. அதனால் பிரபலங்கள் பலரும் தன்னை பற்றி ரசிகர்களிடம் பகிர்வது இல்லை. ஆனால் இயக்குனர் ஒருவர் தன்னைப் பற்றிய விபரங்களை அப்பட்டமாக கூறியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அரசியல் பின்புலத்துடன் உக்ரம் படம் மூலம் கன்னட சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர். அவர் இயக்கிய முதல் படமே ஹிட். அடுத்ததாக தான் இயக்கிய கேஜிஎப் ஆயிரம் கோடி வசூலை கடந்து இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தது.

Also read: சலாருக்குப்பின் தமிழில் களமிறங்கும் பிரசாந்த் நில்.. எந்த நடிகருனு கேட்டா ஆடிப் போயிடுவீங்க!

கே ஜி எஃப் பாகங்களின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து பிரபாஸ் நடிப்பில் சலார் வசூலில் சாதனை செய்து வருகிறது. இருநூறு கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட சலார் பாக்ஸ் ஆபிஸில் வசூலை தெறிக்க விடுகிறது இந்த பிரம்மாண்ட சாதனையின் சொந்தக்காரர் பிரசாந்த் நீல்.

ஒரு இன்டர்வியூல ஆங்கர் கேட்ட கேள்விக்கு பிரசாந்த் நீல் “ நான் குடிச்சிட்டு தான் ஸ்டோரி எழுது ஆரம்பிப்பேன்” என்று ஓபனாக பதில் உரைத்துள்ளார். மேலும் இதை எடிட் பண்ணாமல் போட்டுக்கோங்க என்று தைரியமாக கூறியுள்ளார். பணம் சம்பாதிக்க தான் திரைத்துறைக்கு வந்தேன் அதற்கு அப்புறம் தான் கலை என்று மனதில் பட்டதை ஒளிவு மறைவு இல்லாமல் கூறியுள்ளார் பிரசாந்த் நீல்.

வெளிப்படையாக இருப்பது அவரவர் மனதிற்கு சரி என்று பட்டாலும் சமூகத்தின் பார்வையில் அது தப்பான முன் உதாரணமாக மாறிவிடக்கூடாது என்பது பலரது விருப்பம்.  அந்த வகையில் கடின உழைப்புடன் தனது தனி திறமையின் மூலம் முன்னேறி வரும் பிரசாந்த் நீலின் இந்த சர்ச்சைக்குரிய பேச்சு அவரின் ரசிகர்கள் மற்றும் இளம் தலைமுறையினருக்கு தேவையில்லாத மாற்றத்தை ஏற்படுத்தாமல் இருந்தால் சரிதான்.

Also read: ரஜினி படத்தை காப்பி அடித்த சலார்.. 1000 கோடிக்கு அடி போடும் படம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்