Ajithkumar: உறுதியான விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களின் ரிலீஸ் தேதி.. விஜய்க்கு சம்பவம் பண்ண போகும் AK

Ajithkumar: நடிகர் அஜித்குமார் தன்னுடைய அடுத்தடுத்த படங்களான விடாமுயற்சி மற்றும் குட் பேட்அக்லி படங்களின் ரிலீஸ் தேதியை லாக் செய்து இருக்கிறார். அஜித் நடிப்பில் கடைசியாக ரிலீசான படம் துணிவு. அல்லது 2023 ஆம் ஆண்டு பொங்கல் கொண்டாட்டமாக இந்த படம் ரிலீஸ் ஆனது.

அதன் பின்னர் விடமுயற்சி படம் முடிவாகி, படப்பிடிப்பு தொடங்குவதற்கு கிட்டத்தட்ட ஒரு வருடங்கள் ஆகிவிட்டது. இதனால் அஜித்தின் ரசிகர்கள் ரொம்பவே வெறுப்பில் இருந்தார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

அடுத்தடுத்த ஹீரோக்களின் படங்களின் அப்டேட்டுகள் வந்து கொண்டிருக்கும் நேரத்தில், அஜித்தின் படம் பற்றி தகவல்கள் வெளியாகாதது அவர்களுக்கு பெரிய கஷ்டத்தை கொடுத்திருந்தது. சமூக வலைத்தளம் முழுக்க இந்த பேச்சு தான் அதிகமாக ஓடிக்கொண்டிருந்தது.

ஒரு படத்திற்காக ஒரு வருடமாக காத்திருந்த ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுத்து இருக்கிறார் நடிகர் அஜித்குமார். அஜித் பொதுவாகவே ஒரு படம் முடிப்பதற்கு முன்னால் மற்ற படத்தை பற்றி யோசிக்கும் பழக்கம் இல்லாதவர்.

ஆனால் இந்த முறை விடாமுயற்சி முடிவதற்குள்ளேயே தன்னுடைய அடுத்த படத்தின் அப்டேட்டை கொடுத்திருக்கிறார். அஜித்தின் தீவிர ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடிப்பதற்கான வேலைகளை தொடங்கி இருக்கிறார் அஜித்குமார்.

இந்நிலையில் இந்த இரண்டு படங்களின் ரிலீஸ் தேதியும் இன்று வெளியாகி இருக்கிறது. இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் விடாமுயற்சி படம் இந்த வருடம் அக்டோபர் 31ஆம் தேதி, அதாவது தீபாவளி ரிலீஸ் ஆக வெளியாகிறது.

விஜய்க்கு சம்பவம் பண்ண போகும் AK

அதேபோன்று ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க இருக்கும் குட் பேட் அக்லி படம் அடுத்த ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல் ரிலீஸ் ஆக வெளியாக இருக்கிறது. தளபதி விஜய் நடித்துக் கொண்டிருக்கும் GOAT படத்தை செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் செய்ய இருக்கும் நிலையில், அடுத்த மாதமே விடாமுயற்சி ரிலீஸ் ஆகிறது.

இதனால் கண்டிப்பாக இந்த போட்டியில் யார் வசூலை அள்ளினார்கள் என்று பெரிய போராட்டமே நடக்கப் போகிறது. தளபதி 69 படத்தை பற்றி இதுவரைக்கும் எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. அப்படி திட்டமிட்டபடி தளபதி 69 தொடங்கப்பட்டால், குட் பேட் அக்லி படத்துடன் அந்த படம் மோதும்.

அஜித் மற்றும் விஜய் இருவருமே சமகாலத்து போட்டியாளர்கள். விஜய் இல்லாத சினிமாவை அஜித் ரசிகர்களே விரும்ப மாட்டார்கள். இதில் விஜய்யின் கடைசி படத்துடன் அஜித் படம் மோதினால், நிஜமாகவே தமிழ்நாடு தாங்காது என்று தான் சொல்ல வேண்டும்.

Next Story

- Advertisement -