தனுசுக்கு திறமையும் வளருது திமிரும் வளருது.. ஓவர் அடாவடியால் முகம் சுளித்த தங்கமான சீனியர் நடிகர்

Actor Dhanush: ஆரம்ப காலகட்டத்தில் பல அவமானங்களை சந்தித்தாலும் தனுஷ் இப்போது தன்னுடைய திறமையால் உச்சத்தை தொட்டிருக்கிறார். ஒரு நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், இயக்குனர், பின்னணி பாடகர் என பன்முக திறமை காட்டி வரும் இவர் இப்போது டி 50 படத்தை இயக்கி, நடித்து வருகிறார்.

இப்படி இருக்கும் தனுஷ் தற்போது ஓவர் அடாவடி செய்து வருகிறாராம். இதனால் திறமை வளர வளர இவருடைய திமிரும் வளர்ந்து கொண்டிருக்கிறது என்ற ஒரு பேச்சு திரை உலகில் அடிபட்டு வருகிறது. இதற்கு ஒரு வலுவான காரணமும் இருக்கிறது. என்னவென்றால் இவருடைய நடிப்பில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

Also read: மாலத்தீவில் நடக்காதது ஜெயிலர் ரிலீஸில் நடந்து விட்டதே.. தனுஷ், ஐஸ்வர்யாவை சேர்த்து வைத்த முத்துவேல் பாண்டியன்

இந்த வருட இறுதியில் வெளியாக இருக்கும் இப்படத்தில் கன்னட நடிகர் சிவராஜ் குமாரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். கன்னட திரையுலகில் எம்ஜிஆர் போன்று பார்க்கப்படும் இவர் கேப்டன் மில்லர் சூட்டிங் ஸ்பாட்டில் தனுஷால் முகம் சிவந்து போன ஒரு சம்பவமும் நடந்திருக்கிறது.

அதாவது தனுஷ் அந்த படப்பிடிப்பின் போது எந்த அளவுக்கு அட்ராசிட்டி செய்தார் என்பது பலருக்கும் தெரியும். அந்த வகையில் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு லேட்டாக வருவது, மூடு சரியில்லை என்று உட்கார்ந்து விடுவது, மேக்கப் போட தாமதம் செய்வது என்று பல குடைச்சல் கொடுத்திருக்கிறார். ஆனாலும் படக்குழு வேறு வழியில்லாமல் இது அனைத்தையும் பொறுத்து போய் இருக்கிறார்கள்.

Also read: அக்கட தேசத்து இயக்குனருடன் கைகோர்க்கும் சூர்யா.. தனுஷ், சிவகார்த்திகேயன் வரிசையில் சிக்கிடாதீங்க!

அப்படித்தான் ஒருமுறை படப்பிடிப்பு தளத்திற்கு அவர் மிகவும் தாமதமாக வந்திருக்கிறார். இதனால் சிவராஜ் குமார் கிட்டத்தட்ட 5 மணி நேரம் காத்திருந்தாராம். இப்படி அனைவரின் பிபியையும் ஏற்றி விட்டு கூலாக வந்த தனுஷ் 10 நிமிடம் மட்டுமே நடித்துவிட்டு பேக்கப் என்று சொல்லி அசால்ட் ஆக கிளம்பி இருக்கிறார்.

இதனால் சிவராஜ் குமார் ரொம்பவும் நொந்து போய்விட்டாராம். சமீபத்தில் வெளியான ஜெயிலர் படத்தில் கெஸ்ட் ரோலில் வந்திருந்த இவரை தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து போய்விட்டது. எங்கு திரும்பினாலும் சிவாண்ணா, சிவாண்ணா என்று ரசிகர்கள் இவரை கொண்டாடி வருகின்றனர். அப்படிப்பட்ட தங்கமான நடிகரை தனுஷ் கோபப்படுத்தி இருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

Also read: ஜெயிலர் பட நடிகரை கூப்பிட்டு வைத்து அசிங்கப்படுத்திய தனுஷ்.. மாமனாரை பழிவாங்க இப்படியும் செய்யலாம்.!

Next Story

- Advertisement -