Connect with us

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அக்கட தேசத்து இயக்குனருடன் கைகோர்க்கும் சூர்யா.. தனுஷ், சிவகார்த்திகேயன் வரிசையில் சிக்கிடாதீங்க!

தனுஷ், சிவகார்த்திகேயன் வரிசையில் சூர்யா வேறு மொழி இயக்குனருடன் இணைய இருக்கிறார்.

dhanush-surya-sivakarthikeyan

Actor Suriya: சிறுத்தை சிவா இயக்கத்தில் தற்போது சூர்யா கங்குவா என்ற படத்தில் நடித்து வருகிறார். 3d அனிமேஷனில் உருவாகி வரும் இப்படம் பத்து மொழிகளில் உருவாகி வருகிறது. இந்த சூழலில் வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் அடுத்ததாக சூர்யா நடிக்க உள்ளார். இதற்கு முன்னதாகவே சூரரை போற்று கூட்டணியில் மீண்டும் சூர்யா இணைய இருக்கிறார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

இந்நிலையில் அக்கடதேச இயக்குனருடன் சூர்யா ஒரு படத்தில் கூட்டணி போட இருக்கிறார். அதாவது தெலுங்கு நடிகருடன் சூர்யா இணைய உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் இவ்வாறு தெலுங்கு நடிகர்களை நம்பி தான் மிகப்பெரிய தோல்வி படங்களை கொடுத்திருந்தனர்.

Also Read : பகத் பாசிலின் அஸ்திவாரத்தை அசைக்க வந்த நடிகர்.. விஜய் சேதுபதி எஸ் ஜே சூர்யாக்கு ஏற்பட்ட கலக்கம் பேட்டி

அந்த வகையில் தனுஷுக்கு வாத்தி படம் காலை வாரிவிட்ட நிலையில் சிவகார்த்திகேயனுக்கு அதேபோல் பிரின்ஸ் படம் மிகப்பெரிய தோல்வியை கொடுத்திருந்தது. அந்த வரிசையில் இப்போது சூர்யா சிக்குவாரா அல்லது வெற்றி கொடுத்து இந்த சரித்திரத்தை மாற்றுவாரா என்பது படம் உருவாகி வெளியானால் தான் தெரியவரும்.

அதாவது மலையாளத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்ற படம் தான் பிரேமம். இந்த படத்தை தெலுங்கில் இயக்கியவர் சண்டூ மொண்டேட்டி. இவர் கார்த்திகேயா 2 படத்தை இயக்கிய நிலையில் அடுத்ததாக சில படங்களை எடுத்து வருகிறார். இவர் சமீபத்திய கலந்து கொண்ட போது 4 வேதங்களை கொண்டு சூர்யாவை வைத்து ஒரு படம் எடுக்க உள்ளதாக கூறியிருந்தார்.

Also Read : அடுத்தடுத்து 4 பட தோல்வியால் லோகேஷ் இடம் சரணடைந்த மாஸ் ஹீரோ.. விட்டுக் கொடுத்த ரோலக்ஸ் சூர்யா

மேலும் சூர்யா இப்போது பல படங்களில் பிசியாக இருப்பதால் அடுத்த இரண்டு வருடங்கள் பிறகு தான் இந்த திட்டம் தொடங்கும் என்பதையும் கூறியிருக்கிறார். கங்குவா போல் மற்றொரு பிரம்மாண்டமான நாடகத்தில் சூர்யா நடிக்க இருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் சூர்யாவின் லைன் அப்பில் கங்குவா, வாடிவாசல், சுதா கொங்கரா படம் மற்றும் பாலிவுட் படம் என எக்கச்சக்கமாக இருக்கிறது. இந்த படங்கள் முடிந்த கையோடு தெலுங்கு இயக்குனர் சண்டூ மொண்டேட்டி இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ளார். அதற்குள் கங்குவா படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

Also Read : சூர்யாவை டீலில் விட்டாரா வெற்றிமாறன்.? வருஷ கணக்கில் காக்க வைத்த வாடிவாசல், எதிர்பாராத ஷாக்

Continue Reading
To Top