வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

சிவகார்த்திகேயனை பழி தீர்க்க களமிறங்கும் தனுஷ்.. இந்த வாட்டி சும்மா விடுறதா இல்ல

நடிகர் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படம் தோல்வியடைந்ததையடுத்து, பெரும் நஷ்டத்திற்கு உள்ளானார். மேலும் இப்படத்தின் தோல்வியை ஈடுகட்ட தயாரிப்பாளருக்கு நஷ்ட ஈடு கொடுத்து சரிக்கட்டினார். ஏற்கனவே சிவகார்த்திகேயன் கடனாளியாக உள்ள நிலையில், இனி நடிக்கும் அடுத்தடுத்த படங்களை ஹிட் கொடுக்க வேண்டுமென மும்முரமாக உள்ளார்.

அந்த வகையில் தற்போது இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். அண்மையில் இப்படத்தின் பஸ்ட் சிங்கள் வெளியான நிலையில், ஷூட்டிங் வேலைகள் மும்முரமாக உள்ளது. மேலும் சிவகார்த்திகேயன் நடிப்பில் பல வருடங்களாக கிடப்பிலிருந்த அயலான் படத்தை இந்தாண்டு வெளியிட அப்படக்குழு முடிவு செய்துள்ளதாம்.

Also Read: வித்தியாசமான கேரக்டரில் சிவகார்த்திகேயன் நடித்த 5 படங்கள்.. சுத்தமாக செட்டாகாத போலீஸ் கதாபாத்திரம்

இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிவடைந்த பின், அயலான் படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய உள்ளனர். அந்த வகையில் தற்போது அயலான் படத்திற்கு போட்டியாக பிரபல நடிகர்களின் படங்கள் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு வருடமும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல படங்கள் ரிலீசாகும்.

அந்த வகையில், இந்தாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விஜய்யின் லியோ படத்தின் ரிலீஸ் வரும் அக்டோபர் 19 ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரஜினியின் ஜெயிலர், கமலின் இந்தியன்2 உள்ளிட்ட படங்களும் தீபாவளியை முன்னோக்கி உள்ளது. இருந்தாலும் இப்படங்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல், தனுஷின் கேப்டன் மில்லர் படமும், கார்த்தியின் ஜப்பான் படமும் தீபாவளியை டார்கெட் செய்துள்ளனர்.

Also Read: பாலிவுட் முதல் டோலிவுட் வரை 100 கோடி வசூலித்த தனுஷ்.. பான் இந்தியா பயத்தை காட்டிய கேப்டன் மில்லர்

ஆனால் இதில் நடிகர் தனுஷ் கட்டாயமாக சிவகார்த்திகேயனுடன் மோத வேண்டும் என்ற முனைப்புடன் கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பை வேகப்படுத்தியுள்ளாராம். காரணம், இருவரும் நண்பர்களாக இருந்து எதிரிகளாக மாறியவர்கள். மேலும் இனி வரும் சிவகார்த்திகேயன் படத்தை மட்டும் தனுஷ் டார்கெட் செய்து, அயலான் படத்துடன், கேப்டன் மில்லர் படத்தை கண்டிப்பாக ரிலீஸ் பண்ண வேண்டும் என்ற முனைப்புடன் தனுஷ் உள்ளாராம்.

மேலும் நடிகர் கார்த்தியின் ஜப்பான் படமும் அயலான், கேப்டன் மில்லர் உள்ளிட்ட படத்துடன் ஒரே தேதியில் ரிலீஸ் செய்ய அப்படக்குழு முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் சிவகார்த்திகேயனுக்கு இருக்கும் கடன் பிரச்சனையில் தனுஷ், கார்த்தி உள்ளிட்டோரின் படங்களுக்கு மத்தியில் அவர் படம் ரிலீசானால் கட்டாயம் திரையரங்கு கிடைப்பது முதல் வசூல் ரீதியாக வரை சிவகார்த்திகேயன் செம அடி வாங்குவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: ரோலக்ஸை ஓவர்டேக் செய்ய லியோவில் களமிறங்கும் தனுஷ்.. மிரட்ட வரும் லோகேஷ்

- Advertisement -

Trending News