ரோலக்ஸை ஓவர்டேக் செய்ய லியோவில் களமிறங்கும் தனுஷ்.. மிரட்ட வரும் லோகேஷ்

லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் லியோ திரைப்படத்தை பற்றிய எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. காஷ்மீரில் நடந்த இப்படத்தின் ஷூட்டிங்கில் விஜய், திரிஷா உட்பட ஏராளமான நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். அதை தொடர்ந்து தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக லோகேஷ் தயாராகி வருகிறார்.

அடுத்ததாக ஹைதராபாத்தில் நடைபெற இருந்த சூட்டிங் இப்போது விஜய்யின் கோரிக்கை படி சென்னையில் நடைபெறுகிறது. இந்நிலையில் இப்படத்தில் தனுஷ் கேமியோ ரோலில் நடிக்க இருப்பது உறுதியாகி இருக்கிறது. ஏற்கனவே இது குறித்து அரசல் புரசலாக செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது தனுஷ் சென்னையில் நடக்க இருக்கும் படப்பிடிப்புக்காக 15 நாட்கள் வரை தேதிகளை ஒதுக்கி கொடுத்திருக்கிறாராம்.

Also read: விஜய்க்காக ஐட்டம் டான்ஸ் ஆடிய 5 ஹீரோயின்கள்.. நடிகையாக நடிக்க முடியாத ஆதங்கத்தை தீர்த்த மீனா

இதுதான் இப்போது ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் திக்கு முக்காட வைத்துள்ளது. ஏற்கனவே இந்த படத்திற்காக லோகேஷ் கோலிவுட்டையே வளைத்துப் போட்டிருக்கிறார். அந்த வகையில் நாம் எதிர்பார்க்காத சில சஸ்பென்ஸ் கேரக்டர்களும் இதில் இருக்கிறது என்று கூட கூறுகின்றனர். இந்நிலையில் தனுஷும் இதில் இணைந்திருப்பது லியோ படத்தை சர்வதேச லெவலுக்கு கொண்டு சென்றிருக்கிறது.

மேலும் விக்ரம் திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த ரோலக்ஸ் கதாபாத்திரம் சூர்யாவுக்கு எப்படி ஒரு வரவேற்பை கொடுத்ததோ அதை மிஞ்சும் அளவுக்கு ஒரு கேரக்டர் தான் தனுஷுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறதாம். அதன் காரணமாகவே அவர் எதைப் பற்றியும் யோசிக்காமல் இதில் நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்திருக்கிறார்.

Also read: லியோ படத்தில் இணைந்த மாஸ் ஹீரோ.. ரோலக்ஸை மிஞ்சும் கேரக்டர்

அது மட்டுமல்லாமல் இந்த கேமியோ ரோலுக்காக அவருக்கு ஐந்து கோடி வரை சம்பளம் பேசப்பட்டிருக்கிறதாம். ஆக மொத்தம் லியோ படத்தின் மூலம் தனுஷ் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்திருக்கிறார். இந்த செய்தி தான் தற்போது சோசியல் மீடியாவை கலக்கிக் கொண்டிருக்கிறது.

மேலும் ரசிகர்கள் இன்னும் எத்தனை சர்ப்ரைஸ் தான் கொடுப்பீர்கள் என்றும் அடுத்த அப்டேட் சீக்கிரம் கொடுங்கள் என்றும் ஆர்ப்பரித்து வருகின்றனர். அந்த வகையில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வரும் இப்படம் விஜய்யின் திரை வாழ்வில் முக்கிய படமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதற்காகவே லோகேஷ் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செதுக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Also read: வில்லன் நடிகரால் தலை வலியில் லோகேஷ்.. லியோ படப்பிடிப்பில் நடக்கும் குளறுபடி

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்