இந்தப் படமாவது சக்சஸ் கொடுத்தே ஆகணும்.. மிரட்டலாக வெளிவந்த தனுஷின் அடுத்த பட போஸ்டர்

கோலிவுட் மட்டுமல்லாமல் ஹாலிவுட், பாலிவுட் என கொடி கட்டி பறக்கும் நடிகர் தனுஷ் நடிப்பில் குடும்ப கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ள திருச்சிற்றம்பலம் வரும் ஆகஸ்ட் 18-ஆம் தேதி வெளியாக உள்ளது. அதை தொடர்ந்து தெலுங்கு திரைப்படமான சார் என்ற படங்களிலும் தனுஷ் நடித்து வருகிறார்.

மேலும் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள நானே வருவேன் திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருவதால் கூடிய விரைவில் அந்த படமும் திரையிடப்படவுள்ளது. இதைத்தொடர்ந்து தனுஷ் தன்னுடைய அண்ணன் நடித்த சாணிக் காயிதம் திரைப்படத்தின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார்.

இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் தற்போது வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது. படத்திற்கு ‘கேப்டன் மில்லர்’ என பெயரிடப்பட்டு, படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. ஏற்கனவே தனுஷ், சத்யஜோதி தயாரிப்பில் இதுவரை மூன்று படங்களை நடித்து 4-வது முறையாக இணைந்திருக்கிறார்.

இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்தப் படத்திற்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். பரதேசி படத்திற்காக தேசிய விருது பெற்ற பூர்ணிமா ராமசாமி இந்தப் படத்திற்கு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்ற உள்ளார். இவருடன் சேர்ந்த தனுஷின் ஆடை வடிவமைப்பாளராக காவியா ஸ்ரீராமும் இணைந்து பணியாற்ற உள்ளார்.

சண்டைக்காட்சிகளை திலீப் சுப்பராயன் கவனித்துக்கொள்கிறார். ஆகமொத்தம் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் மூலம் எப்படியாவது சக்ஸஸ் கொடுத்துவிட வேண்டும் என தனுஷ் தீவிரம் காட்டி உள்ளார். படத்தை புஷ்பா, கேஜிஎப் போன்று பிரம்மாண்டமாக தயாரிக்க வேண்டும் என படக்குழு திட்டமிட்டுள்ளது.

படத்தின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் ஏற்கனவே இயக்கிய ராக்கி, சாணி காகிதம் படத்தைப் போல் இல்லாமல் இந்த படம் மிகவும் வித்தியாசமாகவும், படத்தின் கதை 30-களில் மெட்ராஸ் பிரசிடென்சி மையமாக வைத்து எடுக்கப்பட்ட பக்கா ஆக்சன் படமாக இருக்கும். இரண்டாம் பாதியில் போர் காட்சிகள் இடம்பெறும். இதில் தனுசுக்கு கேப்டன் மில்லர் என்ற கதாபாத்திரம் மட்டும் இல்லாமல் இன்னும் இரண்டு கதாபாத்திரங்களும் உள்ளது.

படத்தில் மூன்று விதமான தோற்றத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார். சமீபகாலமாகவே தனுஷ் நடிப்பில் தமிழ் படங்கள் தோல்வியை சந்தித்துக் கொண்டிருப்பதால் கேப்டன் வில்லன் படத்தின் மூலம் விட்டதை பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தனுஷ் இந்தப் படத்தில் கர்ணன், அசுரன் படத்தை போன்றே தன்னுடைய நடிப்பால் பின்னிப் பெடல் எடுத்து ரசிகர்களுக்கு நிச்சயம் விருந்து அளிப்பார் என படத்தின் டைட்டில் போஸ்டரை பார்த்தாலே தெரிகிறது.

captain-miller-cinemapettai
captain-miller-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்