திங்கட்கிழமை, டிசம்பர் 9, 2024

மிருகம் போல் பாய்ந்த ஹீரோயின்? காருக்குள் கேமரா வைத்ததால் காண்டான தனுஷ் பட நடிகை

சாதாரணமாகவே சினிமாவில் உள்ள பிரபலங்கள் எல்லோர் போலவும் வெளியில் சென்று வர முடியாது. ஏனென்றால் எங்கு பார்த்தாலும் அவரது ரசிகர் கூட்டம் அவர்களை சூழ்ந்து கொள்வார்கள். இதனால் அவர்களது பிரைவசி போகிறது. சில சமயங்களில் ரசிகர்கள் நடிகையிடம் எல்லை மீறவும் செய்கிறார்கள்.

அவ்வாறு தற்போது ரசிகர்களின் தொந்தரவு தாங்க முடியாமல் ஒரு பேட்டியில் காண்டாகி கத்திவுள்ளார் தனுஷ் பட நடிகை. அதாவது நடிகை என்றால் எல்லாவற்றையும் விட்டுக் கொடுத்து விட வேண்டும். நாங்கள் மனிதர்களாக இல்லை மிருகமா என்று ஆவேசமாக அவர் பேசி உள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Also Read : தனுஷ்க்கு மட்டும் தான் நோ.. விஜய் சேதுபதி படம்னா டபுள் ஓகே சொல்லும் பாலிவுட் வாரிசு நடிகை

தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை டாப்ஸி. இவருடைய நடிப்பில் காஞ்சனா 2, ஆரம்பம் போன்ற படங்கள் வெளியானது. அதன் பிறகு ஒரு சில படங்களில் நடித்த டாப்ஸி பாலிவுட் பக்கம் சென்று விட்டார். அங்கு அடுத்தடுத்த பட வாய்ப்பு கிடைக்க டாப் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த வருகிறார்.

இந்நிலையில் டாப்ஸி சர்ச்சையில் சிக்கி உள்ளார். அந்த வகையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்த டாப்ஸி கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் பயணித்து வரும் எனக்கு படப்பிடிப்பு தளத்தில் கேமராவுக்கு முன்பு தான் போஸ் கொடுக்க முடியும்.

Also Read : இந்த ரோலுக்கு இவங்கதான் கரெக்ட் என தெறிக்கவிட்ட 5 ஹீரோவின் நண்பர்கள்.. தனுஷ்க்கு டஃப் கொடுத்த முருகதாஸ்

சாதாரணமாக வெளியில் செல்லும்போதெல்லாம் ரசிகர்கள் என்ற பெயரில் வந்து போட்டோ எடுப்பது எனக்கு சுத்தமாக பிடிக்காத விஷயம். அதுமட்டுமின்றி காரின் கண்ணாடி முன் கேமரா வைத்து என்னை போட்டோ, வீடியோ எடுக்கிறார்கள். அவர்களைப் பார்த்தால் எனக்கு எரிச்சலாக வருகிறது.

எனக்கான ஒரு சுதந்திரம் நடிகையாக இருப்பதால் கிடைக்கவில்லை. மேலும் மிருகக் காட்சியில் உள்ள மிருகமா நான், என்னைய எல்லாரும் புகைப்படம் எடுப்பதற்கு, தயவுசெய்து இனிமேலாவது இப்படி செய்யாதீர்கள் என டாப்ஸி ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்துள்ளார்.

Also Read : தனுஷ் பத்திரிக்கையால் சிம்புக்கு வந்த பழி.. பொண்ணு, சினிமா இரண்டையும் விட்டுட்டானே என ஆதங்கத்தில் அடித்த டிஆர்

- Advertisement -

Trending News