தனுஷ், சமந்தா கூட்டணியில் ஒரு மாதமா உருவான படம்.. வெற்றிமாறனின் ஒரே வார்த்தையால் சோலி முடிந்த சம்பவம்

Dhanush: நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் வெற்றிமாறனுக்கு இடையே இருக்கும் நட்பு பற்றி எல்லோருக்குமே தெரிந்த விஷயம் தான். பொல்லாதவன் திரைப்படத்தின் தொடங்கிய இவர்களது நட்பு இவர்களுக்கு மட்டும் பலனாக அமையாமல், தமிழ் சினிமாவுக்கு நல்ல படைப்புகளை கொடுத்திருக்கிறது.

தனுஷ் தனக்கு பிடித்தவர்களுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார் என்பதை நிறைய பேட்டிகளில் சொல்லி இருக்கிறார். ஆனால் வெற்றிமாறனுக்காக செய்த இந்த ஒரு விஷயம் இப்போது பெரிய அளவில் வைரல் ஆகி வருகிறது.

தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் என எல்லாமே நல்ல படைப்புகள் தான். இவர்கள் கூட்டணியில் சூதாடி மற்றும் தேசிய நெடுஞ்சாலை என்னும் இரண்டு படங்கள் அறிவிக்கப்பட்ட பின்னர் தவிர்க்க முடியாத காரணங்களால் கைவிடப்பட்டது.

இதில் சூதாடி படத்தை பற்றி வெற்றிமாறன் சமீபத்தில் ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார். அந்தப் பேட்டியில் சூதாடி படம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு ஒரு மாத படபிடிப்பு கூட நடைபெற்றதாக சொல்லி இருக்கிறார்.

வெற்றிமாறனின் ஒரு வார்த்தையால் எல்லாமே க்ளோஸ்

ஒரு மாதத்திற்கு பிறகு ஒருநாள் வெற்றிமாறன், தனுஷிடம் எனக்கு இந்த கதையின் மேல் கொஞ்சம் சந்தேகம் இருக்கிறது. எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்கள், ஏதாவது ஒரு சின்ன பட்ஜெட் திரைப்படத்தை இயக்கி முடித்துவிட்டு இந்த படத்தை ஆரம்பிக்கலாம் என்று சொல்லி இருக்கிறார்.

அதற்கு தனுஷ் கொஞ்சம் கூட யோசிக்காமல் உடனே சரி என்று சொல்லிவிட்டாராம். அது மட்டும் இல்லாமல் வெற்றிமாறன் அடுத்து இயக்கிய அந்த சின்ன படத்தை தயாரித்ததும் தனுஷ் தான். அப்படி உருவான படம் தான் விசாரணை.

அட்டகத்தி தினேஷ் நடித்த இந்த படம் தேசிய விருது வாங்கியது. நண்பன் சொன்ன ஒரு வார்த்தைக்காக பட வேலைகளை நிறுத்தியதோடு, அவருடைய அடுத்த படத்தை தயாரித்துக் கொடுப்பதெல்லாம் தனுஷால் மட்டும்தான் முடியும்.

Next Story

- Advertisement -