வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

அப்பத்தாவின் கனவை நிறைவேற்ற போகும் மருமகள்கள்.. பின்னணியில் இருக்கும் ஜீவானந்தத்தின் சூழ்ச்சி

Ethirneechal: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில் இதுவரை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த குணசேகரன் வீட்டு மருமகள்கள் சுய புத்தியுடன் போராட போகிறார்கள். அதாவது படித்த பெண்களை அடிமையாகவும், வேலைக்காரியாகவும் வைத்திருந்தார் குணசேகரன். இவர்களை எப்படியாவது காப்பாற்றி முன்னேற வைக்க வேண்டும் என்று ஜனனி மற்றும் அப்பத்தா பல முயற்சிகள் எடுத்தார்கள்.

அதற்கேற்ற மாதிரி ஈஸ்வரி, ரேணுகா, நந்தினி இவர்கள் ஒவ்வொருவரும் அவர்களுக்கு ஏற்ற மாதிரி  வேலையை பார்க்க ஆரம்பித்தார்கள். ஆனால் அதிலும் குணசேகரன் குளறுபடி செய்து அவர்களை அப்படியே வீட்டில் முடக்கி போட்டு விட்டார். இதனால் அப்பத்தா எவ்வளவு அட்வைஸ் கொடுத்து இருந்தாலும் அதை கண்டும் காணாமல் அந்த வீட்டுப் பெண்கள் அடிமையாகவே வாழ்ந்து வந்தார்கள்.

இனிமேலும் இவர்கள் இப்படி இருக்கக் கூடாது என்று அப்பத்தாவிற்கு ஏற்பட்ட ஒரு அசம்பாவிதத்தால் எல்லாவற்றையும் மாற்றி அமைக்க வேண்டும் ஜீவானந்தம் சூழ்ச்சி செய்திருக்கிறார். அதாவது அப்பத்தா இறந்து போன மாதிரி எல்லாரையும் நம்ப வைத்திருக்கிறார். அதற்கு காரணம் குணசேகரன் மற்றும் அவர்களுடைய தம்பிகள் தான் என்று ஜோடித்திருக்கிறார்.

Also read: எதிர்நீச்சல் சீரியலை ஒன்னும் இல்லாமல் ஆக்கிய சிங்கப்பெண்.. ஒத்த ஆளாக நின்னு சிக்ஸர் அடிக்கும் ஆனந்தி

இதை நம்பிய மருமகள்கள் மொத்த வெறியும் குணசேகரன் மற்றும் தம்பிகள் மீது வைத்து இனியும் இவர்களை நம்புவது வேஸ்ட். அத்துடன் நாம் இனி அடிமையாக இருக்கக் கூடாது நம்மளால் ஜெயிக்க முடியும் என்று காட்ட வேண்டும். இதைத்தான் அப்பத்தாவும் நம்மிடம் எதிர்பார்த்தார். அதனால் அவருடைய ஆசையை நிறைவேற்றும்படி நாம் அனைவரும் ஜெயிக்க வேண்டும் என்று முடிவு கட்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் இனி குணசேகரன் மற்றும் கதிருக்கு ஒவ்வொரு நாளும் மருமகளால் இடி விழப் போகிறது. அத்துடன் ஞானம் இதுவரை அண்ணனை கண்மூடித்தனமாக நம்பி வந்தார். அதனால் இவரை ஒரு அல்லகையாக குணசேகரன் பயன்படுத்தினார். ஆனால் தற்போது அண்ணன் என்னென்ன தவறுகள் செய்திருக்கிறார் என்ற விஷயம் ஈஸ்வரி மற்றும் சக்தி மூலம் தெரிய வந்து விடுகிறது.

இவருக்கு மட்டும் இல்லாமல் குணசேகரின் அம்மாவுக்கும் ஜீவானந்தத்தின் மனைவி இறப்பிற்கு காரணம் குணசேகரன் மற்றும் கதிர் தான் என்கிற உண்மை தெரிந்து விடுகிறது. அத்துடன் அப்பத்தாவின் இறப்பிற்கும் இவர்கள் தான் காரணம் என்று ஆவேசமாக எல்லா உண்மையும் போட்டு உடைக்கிறார் ஈஸ்வரி. இதனால் அரண்டு போய் ஞானம் இருக்கிறார். அட்லீஸ்ட் இனியாவது சக்தி மாதிரி மனைவிக்கு சப்போர்ட்டாக நிற்க வேண்டும். ஆனால் இனி இவர்கள் யார் சப்போர்ட்டும் தேவையில்லை என்று மருமகள்கள் துணிந்து போராட ஆரம்பித்து விட்டார்கள்.

Also read: இந்த வார டிஆர்பி-யில் டாப் 6 இடத்தில் இருக்கும் சீரியல்கள்.. புத்தம் புது சீரியலால் பின்னுக்கு தள்ளப்பட்ட எதிர்நீச்சல்

- Advertisement -

Trending News