சீரியலில் நடித்த பின்பு படிப்படியாக முன்னேறி சினிமாவிற்கு வந்த 5 ஆர்டிஸ்ட்கள்.. வெள்ளி திரையில் ஜொலிக்கும் கவின் பிரியா

Actor kavin and Actress Priya Bhavani Shankar: தமிழ் சினிமாவில் சீரியல் ஆர்ட்டிஸ்ட் ஆக இருந்து படிப்படியாக முன்னேறி வெள்ளித்திரைக்கு வந்து பெரிய அளவில் வெற்றி பெற்ற நட்சத்திரங்கள் பலரும் இருக்கிறார்கள். அதில் தற்போது முன்னணியில் இருக்கும் பிரபலங்களை பற்றி பார்க்கலாம்.

சமுத்திரக்கனி: இவர் ரமணி VS ரமணி என்ற சீரியல் மூலம் அறிமுகமானார். அதில் இவருடைய கேரக்டர் சென்சார் எடுப்பவராகவும் மற்றும் விற்பனை செய்யக்கூடிய மார்க்கெட்டிங் பிரதிநிதியாகவும் வந்திருப்பார். இதில் கிடைத்த சின்ன ரோலில் மூலம் படிப்படியாக முன்னேறி வெள்ளித்திரைக்கு வந்து நடிகராகவும், இயக்குனராகவும் பன்முகத் திறமையே வெளிப்படுத்தி வருகிறார்.

Also read: எவ்வளவு பட்டாலும் திருந்தாத சமுத்திரக்கனி.. அக்கட தேசத்தில் மீண்டும் மீண்டும் அசிங்கப்படும் பரிதாபம்

வாணி போஜன்: இவர் “தெய்வத்திருமகள்” என்ற சீரியலில் சத்தியா என்ற கேரக்டரில் பல பேர் மனதில் இடம் பிடித்து சின்ன நயன்தாரா என்று சொல்லும் அளவிற்கு அனைவரையும் கவர்ந்து விட்டார். அதன் பின்னே இவருக்கு வெள்ளித்திரையில் கிடைத்த வாய்ப்பை வைத்து தற்போது பிரபலமான நடிகையாக மாறிவிட்டார்.

சூரி: இவர் முதன்முதலாக அறிமுகமானது சின்னத்திரையில் வெளியான திருமதி செல்வம் என்ற நாடகத்தின் மூலம் தான். இதில் சஞ்சீவ் வைத்திருக்கும் மெக்கானிக் செட்டில் அவருக்கு வேலை பார்க்கும் உதவியாளராக சூரி நடித்திருக்கிறார். அதன் பின் புரோட்டா சூரி என்ற காமெடியின் மூலம் அறிமுகமாகி நகைச்சுவை நடிகர் என்று வந்த நிலையில் தற்போது நடிகராகவும் மாறி இருக்கிறார்.

Also read: தனுசுக்கு போன பட வாய்ப்பை தட்டி தூக்கிய கவின்.. பாராட்டியவருக்கே அடித்த விபூதி  

கவின்: இவருடைய வேலையை சின்னத்திரையில் நடிப்பது தான் என்று நினைத்து கனா காணும் காலங்கள் சீசன் 2, தாயுமானவன், சரவணன் மீனாட்சி மற்றும் சரவணன் மீனாட்சி சீசன் 2 முக்கிய ஹீரோவாக வலம் வந்தார். அதன் பின் ஒரு சில படங்களில் ஹீரோவுக்கு நண்பராக வந்த இவர் பிக் பாஸ்க்கு சென்று பல பேர் மனதில் இடம் பிடித்து தற்போது முன்னணி ஹீரோவாக வருகிறார்.

பிரியா பவானி சங்கர்: பல இளைஞர்களையும் இவருடைய நடிப்பால் சீரியலை பார்க்க வைத்திருக்கிறார். இவர் சின்னத்திரையில் “கல்யாணம் முதல் காதல் வரை” என்ற நாடகத்தில் இவருடைய அசாத்திய நடிப்பாலும், இயல்பான குணமும் இவரை வெள்ளித்திரைக்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. அதை சரியாக பயன்படுத்திக் கொண்டு தற்போது முன்னணி நடிகர்களுக்கு ஜோடி சேர்ந்து நடிக்கும் வாய்ப்பை பெற்றுவிட்டார்.

Also read: ஒர்க் அவுட்டில் கிக் ஏற்றிய பிரியா பவானி சங்கர்.. படாத பாடுபடும் ஜிம் மாஸ்டர்

Next Story

- Advertisement -