விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பலரும் தற்போது சினிமாவில் அடி எடுத்து வைத்து வருகின்றனர். அந்த வகையில் அந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட யூடியூப் பிரபலமான அஸ்வின் தற்போது ஹீரோவாக அறிமுகமாக உள்ளார்.
யூடியூபில் இருக்கும்போது அவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. ஆனால் சினிமாவில் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்காமல் சின்ன சின்ன கதாபாத்திரங்களிலும் குறும்படங்களில் நடித்து வந்தார்.
இந்நிலையில் விஜய் டிவி அவரது வாழ்க்கையில் ஒளிவிளக்கு ஏற்றி வைத்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். அடுத்த ரொமான்டிக் ஹீரோவாக வலம் வர அதிக வாய்ப்பு இருக்கிறது என்கிறது கோலிவுட் வட்டாரம்.
அதேபோல் தற்போது யூடியூபில் தனக்கென ஒரு தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்துள்ள நாயகி தேஜு அஸ்வினி. சந்தானம் நடிப்பில் வெளிவந்த பாரிஸ் ஜெயராஜ் படத்தில் புளிமாங்கா புளிப் என்ற பாடல் மூலம் பிரபலமானார்.
இதுதான் அவருக்கு சினிமாவில் அறிமுகம். அதனைத் தொடர்ந்து தற்போது ஹீரோயினாக அஸ்வின் நடிக்கும் என்ன சொல்லப் போகிறாய் படத்தில் அறிமுகமாக உள்ளார். அவருக்கு இருக்கும் வரவேற்புக்கு விரைவில் முன்னணி நடிகையாக மாறி விடுவாராம்.
சமீபகாலமாக யூடியூப் பெரிய அளவு பலருக்கும் உதவி வருகிறது. தமிழ் சினிமா கனவில் இருக்கும் பலருக்கும் சினிமாவில் பெரிய வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்து வருகிறது என்பது மறுக்க முடியாத ஒன்று.