வடிவேலுவை ஓரம் கட்ட வரும் காமெடி நடிகர்.. ரீ என்ட்ரியில் தரமான சம்பவம் இருக்கு

வடிவேலு ரெக்கார்ட் தடை நீங்கி இப்போது தான் சினிமாவில் தலை தூக்கி உள்ளார். நாய் சேகர் ரிட்டன்ஸ், சந்திரமுகி 2 என கையில் எக்கச்சக்க படங்களை வைத்துள்ளார். இப்போது காமெடி நடிகர்கள் எல்லாம் ஹீரோவாக நடித்து வருவதால் படங்களில் காமெடிக்கு பஞ்சம் வந்துள்ளது.

இந்நிலையில் தற்போது வடிவேலும் ஹீரோவாக நடித்து வரும் நிலையில் அவரை ஓரம்கட்ட மாஸ் காமெடி நடிகர் ஒருவர் ரீ என்ட்ரி கொடுக்க உள்ளார். இவர் தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு மேல் கொலுச்சி நின்றவர். நடுவில் இவர் சினிமாவில் இல்லை என்றாலும் ரசிகர்கள் இவரது காமெடியை பார்த்த ரசித்து வந்தார்கள்.

Also Read : பெரும் முதலாளிகளை கதறவிடும் வடிவேலு.. எங்க பேனர்ல நடிக்க வேண்டாம் என கையெடுத்துக் கும்பிட்ட நிறுவனம்

அதாவது கவுண்டர் காமெடிகளுக்கு பேர் போன கவுண்டமணி தான் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்க உள்ளார். செந்தில், கவுண்டமணி இடையே ஆன நகைச்சுவை பெரிய அளவில் பேசப்பட்டது. வயது முதிர்வு மற்றும் உடல்நிலை பிரச்சனை காரணமாக கவுண்டமணி சினிமாவில் இருந்த ஒதுங்கி இருந்தார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு கவுண்டமணி 49 ஓ என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக என்ட்ரி கொடுத்தார். இதைத்தொடர்ந்து இரண்டு மூன்று படங்களில் நடித்த கவுண்டமணி அதன்பின்பு நடிப்பதை நிறுத்திக் கொண்டார். இந்நிலையில் மீண்டும் கதாநாயகனாக கவுண்டமணி களமிறங்க உள்ளார்.

Also Read : ரஜினி, கவுண்டமணி கூட்டணியில் செம்ம லூட்டி அடித்த 6 படங்கள்.. பத்த வச்சுட்டியே பரட்ட!

அதாவது பேய காணோம் என்ற படத்தை இயக்கிய அன்பரசன் இயக்க உள்ள பழனிச்சாமி வாத்தியார் என்ற படத்தில் தான் கவுண்டமணி ஹீரோவாக நடிக்க இருக்கிறாராம். இந்தப் படத்தை மதுரை செல்வம் தயாரிக்க விருக்கிறார்.

ஆகையால் மிக விரைவில் பழனிச்சாமி வாத்தியார் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம். இப்போது தனது செகண்ட் இன்னிங்ஸ் தொடங்கியுள்ள கவுண்டமணி வடிவேலுக்கு சரியான டஃப் கொடுக்க உள்ளார்.

Also Read : செந்தில், கவுண்டமணி என்றாலே திரும்பத் திரும்ப பார்க்க தூண்டும் 5 படங்கள்.. இன்று வரை மறக்க முடியாத டிக்கி லோனா

Next Story

- Advertisement -