இரட்டை குழந்தைகள் எப்படி பொறந்துச்சு? தரமான பதிலடி கொடுத்த சின்மயி

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழி படங்களில் பின்னணி பாடகியாக பணியாற்றியவர் பாடகி சின்மயி. கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் இவருடைய முதல் பாடலான ஒரு தெய்வம் தந்த பூவே பாடல் இவரை மிகவும் பிரபலமாக்கியது. மெல்லிசையான பாடலில் இவருடைய இன்னிசையான குரல் பலரையும் வருடி இழுத்தது.

ஏ ஆர் ரஹ்மான், யுவன் ஷங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ், இளையராஜா என பல முன்னணி இசையமைப்பாளர்களின் படங்களில் சின்மயி பாடியுள்ளார். இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு நடிகர் ராகுல் ரவீந்திரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் திருமணமாகி கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கு பிறகு சின்மயிக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளது. சின்மயி தனது சமூக வலைத்தள பக்கத்தில் குழந்தைகளின் பிஞ்சு விரல்களை பதிவிட்டு ட்ரிப்தா மற்றும் ஷர்வாஸ் என பெயரிட்டு உள்ளதாக தெரிவித்து இருந்தார்.

ஆனால் சின்மயின் கர்ப்பகால புகைப்படங்கள் எதுவுமே இணையத்தில் வெளியாகவில்லை. இதனால் பலரும் நீங்கள் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றோர்களா என்ற கேள்வியை பதிவிட்டு வந்தனர். அதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக சின்மயி சிலவற்றை பதிவிட்டுள்ளார்.

இந்த இரு குழந்தையும் நான் பத்து மாதம் சுமந்து பெற்ற குழந்தை தான். அது என்னுடைய நெருக்கமானவர்களுக்கு மட்டுமே தெரியும். நான் கர்ப்பமாக இருந்த போட்டோக்கள் எதையும் வெளியிடவில்லை. இன்னும் சில நாட்களில் என் குழந்தைகளின் போட்டோவையும் இணையத்தில் வெளியிட மாட்டேன் என சின்மயி குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் சின்மயி இரட்டைக் குழந்தைகளுக்கு தாய் ஆன செய்தியை கேட்ட பல பிரபலங்களும் இவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். நடிகை திரிஷா, பிரசன்னா, கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் பலர் சின்மயி தம்பதியினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

Next Story

- Advertisement -