வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

RDX பாம்புன்னு பீலா விட்டு செஞ்ச தில்லாலங்கடி வேலை.. சந்திரமுகி 2 ஆல் விழி பிதுங்கி நிற்கும் தயாரிப்பாளர்கள்

Chandramuki 2: சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான சந்திரமுகி 2 படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. காரணம் படத்தின் கதையில் சொதப்பல் தாண்டி நடிகர், நடிகைகளும் பெரிய அளவில் ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறார்கள். லாரன்ஸ், கங்கனா ரனவத், லட்சுமி மேனன், ராதிகா சரத்குமார், வடிவேலு என ஏகப்பட்ட திரை பிரபலங்கள் நடித்திருந்தார்கள்.

அதிலும் குறிப்பாக சந்திரமுகி படத்தில் எப்படி ஜோதிகா மிரள விட்டிருப்பாரோ அதைவிட பல மடங்கு கங்கனா சந்திரமுகி 2 படத்தில் சம்பவம் செய்திருக்கிறார் என சொல்லப்பட்டது. அதுவும் rdx பாம்பு தான் கங்கனா என பீலா விட்டிருந்தனர். இதை நம்பி தான் இப்போது தயாரிப்பாளர்கள் ஏமாந்து போய் விழி பிதுங்கி நிற்கிறார்கள்.

Also Read : போட்ட பட்ஜெட்டை எடுக்க முடியாமல் திணறும் சந்திரமுகி 2, இறைவன்.. 5வது நாள் முடிவில் செய்த வசூல்

அதாவது சந்திரமுகி 2 படம் வெளியாவதற்கு முன்பே கங்கனா நடிப்பு அபாரமாக இருக்கிறது என ஹைப்பை ஏற்று விட்டுள்ளனர். இதனால் தமிழில் அடுத்த இரண்டு மூன்று படங்களில் கங்கனாவை புக் செய்த விட வேண்டும் என அட்வான்ஸ் தொகையை கொடுத்து லாக் செய்து விட்டனர். ஆனால் படம் இப்போது விமர்சனத்திற்கு உள்ளாகி விட்டது.

அதிலும் குறிப்பாக கங்கனாவின் நடிப்பும் சுமார் தான். இப்போது முன்னதாகவே அட்வான்ஸ் தொகையை வாங்கி உள்ள கங்கனாவுக்கு சம்பளமும் அதிகமாக கொடுப்பதாக பேசப்பட்டிருக்கிறது. இப்போது கங்கனாவை புக் செய்த தயாரிப்பாளர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

Also Read : சந்திரமுகி 2, இறைவன் இரண்டாம் நாள் வசூல் விவரம்.. ரஜினியின் இமேஜை காலி செய்த லாரன்ஸ்

மேலும் விப்பின் தாஸ் விஜய் சேதுபதியை வைத்து ஒரு படத்தை எடுக்கிறார். ஆனால் இந்த படத்தில் கதாநாயகிக்கு தான் அதிக முக்கியத்துவம். அந்தப் படத்திலும் கங்கனா ரனவத் தான் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். ரிலீசுக்கு முன்பே புரளியை கிளப்பி விட்டதால் இப்போது கங்கனா காட்டில் பண மழை பெய்து வருகிறது.

ஆனால் இப்போது சந்திரமுகி 2 படத்தை தயாரித்த லைக்கா நிறுவனமே பட்ஜெட்டை எடுக்குமா என்ற சந்தேகத்தில் தான் இருக்கிறது. ஏனென்றால் கிட்டத்தட்ட ஐந்து நாட்களை கடந்த நிலையில் 24 கோடி மட்டுமே வசூல் செய்து இருக்கிறது. விடுமுறை நாட்களிலேயே வசூலில் திணறுவதால் இனி வேலை நாட்கள் என்பதால் கண்டிப்பாக கலெக்ஷனில் பெருத்த அடி வாங்கும்.

Also Read : ஐயோ அது ரொம்ப சின்ன பொண்ணுங்க.. பதறிய விஜய் சேதுபதி, ஷாக் கொடுத்த விஜய்

- Advertisement -

Trending News