மறக்க முடியாமல் போன மறக்குமா நெஞ்சம்.. ஏ.ஆர் ரகுமானுக்கு வக்காலத்து வாங்கும் பிரபலங்கள்

A.R.Rahman: கடந்த இரு நாட்களாகவே சோசியல் மீடியா முழுவதும் ஏ ஆர் ரகுமான் குறித்த சர்ச்சை தான் பூகம்பமாக வெடித்துக் கொண்டிருக்கிறது. மறக்குமா நெஞ்சம் என்ற இசை கச்சேரியை நடத்திய அவர் அதை வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத அளவுக்கு செய்து விட்டதாக ஆடியன்ஸ் குமுறி வருகின்றனர்.

அந்த அளவுக்கு நிகழ்ச்சியை காண வந்த ரசிகர்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு தப்பித்தோம் பிழைத்தோம் என்று கதறாத குறையாக வந்திருக்கின்றனர். இது தற்போது அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் ஏ ஆர் ரகுமான் நான் பலியாடு ஆகிறேன் என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

Also read: இளையராஜா இப்படி ஒரு மனுசனா.? மொத்த வாழ்க்கையும் புட்டு புட்டு வைத்த ஏ ஆர் ரகுமான்

மேலும் நிகழ்ச்சியை பார்க்க முடியாமல் திரும்பியவர்கள் டிக்கெட்டை அனுப்பி காசை பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் ரசிகர்களின் கோபம் கட்டுக்கடங்காமல் தான் இருக்கிறது. ஏனென்றால் கிட்டத்தட்ட 30 ஆயிரம் பேர் அமரக்கூடிய இடத்தில் அதிக விலைக்கு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்கப்பட்டிருக்கிறது.

இதனால் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் போலீஸ் மற்றும் பாதுகாவலர்கள் திணறி இருக்கின்றனர். இதற்கு முழு பொறுப்பு விழா ஏற்பாட்டாளர்கள் தான் என்று தற்போது பேசப்பட்டு வருகிறது. ஆனாலும் ஏ ஆர் ரகுமான் மீது அடுத்தடுத்த விமர்சனங்கள் வருவதை பார்த்த பல பிரபலங்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Also read: டெலிட் ஆன பாடல்களை ஓவர் நைட்டில் மிரட்டிவிட்ட ஏ ஆர் ரகுமான்.. லாஜிக் ஓட மேஜிக்காய் மாறிய சம்பவம்

அதிலும் யுவன் சங்கர் ராஜா, கார்த்தி ஆகியோர் வெளிப்படையாகவே அவருக்கு வக்காலத்து வாங்கி இருக்கின்றனர். அதன்படி யுவன் சங்கர் ராஜா இது போன்ற நிகழ்ச்சியை நடத்துவது மிகவும் சவாலானது. ரசிகர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் தான் நாங்கள் கச்சேரியை ஆரம்பிக்கிறோம். மேலும் விழா ஏற்பாட்டாளர்களின் பொறுப்பில் அனைத்தையும் விட்டுவிட்ட நிம்மதியில் தான் நாங்கள் இருப்போம்.

ஆனால் எதிர்பாராத விதமாக இப்படி ஒரு சம்பவம் நடந்து விட்டது என்று கூறியுள்ளார். அதேபோன்று கார்த்தியும், எங்கள் குடும்பமும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தோம். பல குளறுபடிகளின் காரணமாக இப்படி நடந்து விட்டது. அதனால் ரசிகர்கள் ஏ ஆர் ரகுமான் மீது இந்த சூழலில் வெறுப்பை காட்டாமல் அன்பை காட்ட வேண்டும் என்று சப்போர்ட்டாக பேசியுள்ளார். இருந்தாலும் சரியாக திட்டமிடாமல் பல கஷ்டங்களுக்கு வழிவகுத்த இந்த நிகழ்ச்சி தற்போது கடும் விமர்சனத்திற்கு ஆளாகி வருகிறது.

Also read: சாவு பயத்தை காட்டிய ஏ ஆர் ரகுமான்.. அனிருத்துக்கு இருக்கும் அறிவு கூட உங்களுக்கு இல்லையா.?

- Advertisement -spot_img

Trending News