ரெண்டு மாசமா உருட்டுனத 23 மணி நேரத்தில் காலி செய்த விஜய்.. கழுகை வம்புக்கு இழுக்கும் ப்ளூ சட்டை

Vijay, Rajini, Blue Sattai Maran: அஜித் தனக்கு போட்டியே வேண்டாம் என்று ஒதுங்கிய நிலையில் விஜய் மற்றும் ரஜினி ரசிகர்கள் இடையே இணையத்தில் ஒரு உலகப் போர் நடந்து கொண்டிருக்கிறது. போதாக்குறைக்கு சினிமா விமர்சகர்களும் சில விஷயங்களை கொளுத்தி போட அது இணையத்தில் தீப்பிடித்து விடுகிறது.

அப்படிதான் ப்ளூ சட்டை மாறன் ரஜினியை வம்பு இழுக்கும் படியாக தொடர்ந்து விமர்சனங்களை பதிவிட்டு வந்தார். அதுவும் ஜெயிலர் படத்திற்கு அவர் மோசமான விமர்சனத்தை கொடுத்தும், 650 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இப்போது சும்மா இருந்த வாய்க்கு வெத்தலை கிடைத்தது போல் லியோ ட்ரெய்லரால் மீண்டும் பழைய தோனியை தோளில் போட்டிருக்கிறார் ப்ளூ சட்டை.

Also Read : காதலுக்கு மரியாதை விஜய்யை திரும்ப கொண்டு வரும் தளபதி 68.. பல கோடிகளை வாரி இறைக்கும் ஏஜிஎஸ்

அதாவது லியோ படத்தின் ட்ரெய்லர் அக்டோபர் 5 வெளியானது. அதுவும் இந்த ட்ரெய்லர் வெளியாகி 23 மணி நேரத்திலேயே 30 மில்லியன் பார்வையாளர்களை கடந்து விட்டது. அதுவும் 28 மணி நேரத்தில் கிட்டதட்ட 34 மில்லியன் பார்வையாளர்களை பெற்றிருந்தது. ஆனால் ஜெயிலர் படத்தின் டிரைலர் வெளியாகி கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகிறது.

ஆனாலும் தற்போது வரை 30 மில்லியன் பார்வையாளர்களை மட்டும் பெற்று இருக்கிறது. இந்த போஸ்டரை தனது சமூக வலைத்தளத்தில் ப்ளூ சட்டை பதிவிட்டு இரண்டு மாசமாக ஜெயிலர் உருட்டினதை 23 மணி நேரத்திலேயே விஜய் சாதித்து விட்டார். அதுவும் விஜய் முன்னாடி தலைவர் ஜூஜூபி என பதிவிட்டிருக்கிறார்.

Also Read : மொத்தத்தையும் காலி செய்த லியோ ட்ரெய்லர்.. விஜய்க்கு சிக்கலை ஏற்படுத்திய 7 விஷயங்கள்

மேலும் லியோ படத்திற்கு இந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருப்பது எல்லோரையுமே வியக்கச் செய்திருக்கிறது. ஆனாலும் திருப்பூர் சுப்ரமணியன் இது பற்றி பேசுகையில் எல்லா படங்களுக்குமே ரிலீஸ் ஆவதற்கு முன்பு இதேபோன்ற லைக்ஸ் வருவது சர்வ சாதாரணம் தான். ஆனால் படம் நன்றாக இருந்தால் மட்டுமே ஓடும் என்று கூறி இருக்கிறார்.

அப்படி பார்க்கும்போது ஜெயிலர் வெளியான போது ஒரே நாளில் இவ்வளவு பார்வையாளர்களைப் பெறவில்லை. லியோ படத்திற்கு மட்டும் ஒரு நாளிலேயே 30 மில்லியன் கடந்ததை சாதாரணமாகவும் பார்க்க முடியாது என சினிமா விமர்சகர்கள் கூறுகிறார்கள். மேலும் படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ளதால் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் எகிறிக்கொண்ட போகிறது.

blue-sattai-maran
blue-sattai-maran

Also Read : லியோ சோலிய முடிச்சிட்டு நியாயமா பேசுறாங்களாம்.. ஆரம்பிக்கிறதுக்கு முன் விஜய்க்கு வச்ச முற்றுப்புள்ளி