வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

லியோ சோலிய முடிச்சிட்டு நியாயமா பேசுறாங்களாம்.. ஆரம்பிக்கிறதுக்கு முன் விஜய்க்கு வச்ச முற்றுப்புள்ளி

நேற்று இரவில் இருந்து சமூக வலைதளமே அல்லோல பட்டு கொண்டிருக்கிறது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே விஜய்யின் லியோ ட்ரெய்லர் வெளியானது. இதை பல ஊர்களில், பல திரையரங்குகள் வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்தது .

இப்படி தியேட்டர்கள் வெளியிடுவதில் எப்பொழுதுமே ரோகிணி தியேட்டருக்கு ஒரு சிறப்பம்சம் உண்டு. அதே போல் தான் இம்முறை லியோ ட்ரெய்லரை வெளியிட்டு வசமாக மாட்டிக் கொண்டனர். சுமார் 1000 க்கு அதிகமான ரசிகர்கள் நேற்று ரோகிணி தியேட்டர் முன் திரண்டு இருந்தனர்.

Also read: விஜய்யின் பேச்சை மீறி நடக்கும் அநியாயம்.. அடுத்த முதல்வர் தளபதியா, உதயநிதியா.? குளிர் காயும் ப்ளூ சட்டை

உள்ளே சென்று ட்ரைலரை பார்த்த அவர்கள் ஒவ்வொரு இருக்கையின் மீது ஏறி ஆடியுள்ளனர் இதில் ஒரு பகுதி இருக்கைகள் முழுவதும் சேதமடைந்து தியேட்டருக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இது ஒரு புறம் இருக்க ட்ரைலரில் விஜய் மிகவும் ஆபாசமான ஒரு வார்த்தையை பேசியிருக்கிறார்.

சுமார் 4 மில்லியன் பேர் பார்த்த அந்த ட்ரெய்லரில் விஜய் இப்படி பேசியது பெரும் பேசு பொருளாக மாறி உள்ளது. ஒரு அரசியல் கட்சி ஆரம்பித்து அரசியலில் ஜெயிக்க விரும்பும் விஜய்யா இப்படி பேசி உள்ளார் என்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Also Read : கடுகு சிறுத்தாலும் காரம் பெருசு.. தம்மா துண்டு இருந்துட்டு விஜய், ரஜினிகே டஃப் கொடுக்கும் ஜிவி பிரகாஷ்

இப்படி பேசிவிட்டு அதற்கு ஒரு சப்பை கட்டு கட்டுகிறார்கள். இதை படத்தில் நாங்கள் பீப் சவுண்ட் போட்டு மறைத்து விடுவோம் என்று கூறுகிறார்கள். இப்பொழுது இந்த ட்ரெய்லரை 4 மில்லியன் பேர் பார்த்து விட்டனர் இனிமேல் அவர்கள் மறைத்தால் என்ன மறைக்காவிட்டால் என்ன. சினிமாவில் பெரும் அனுபவம் உள்ள உச்ச நட்சத்திரமான விஜய் இப்படி பேசியது தவறு.

விஜய் அரசியலுக்கு இது ஒரு அடியாக அமைந்துள்ளது. குடும்பங்கள், குழந்தைகள் அனைவரும் இருக்கிறார்கள் என்று ஒரு பொறுப்பில்லாமல் இப்படி நடந்தது கொள்வது ஒரு பாதகமான செயலாக பார்க்கப்படுகிறது. அரசியல் அஸ்திவாரத்தை ஆரம்பிக்கும் முன் விஜய்க்கு பெரும் அடியாக இது அமையும்.

Also Read : வெங்கட் பிரபு அண்ட் கோ-வை வெட்டிவிட்ட விஜய்.. தளபதி 68 காக செய்யும் தியாகம்

- Advertisement -

Trending News