சல்மான் கானின் டைகர் 3 எப்படி இருக்கு.? ப்ளூ சட்டையின் விமர்சனம்

Tiger 3 – Blue Sattai Maran: பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடிப்பில் சமீபத்தில் டைகர் 3 படம் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. மணீஷ் ஷர்மா இயக்கத்தில் யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் இப்படம் உருவாகி இருக்கிறது. இதற்கு முன்னதாக வெளியான இரண்டு பாகங்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் டைகர் 3 ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை தான் பெற்று வருகிறது.

அந்த வகையில் சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது யூடியூப் சேனலில் டைகர் 3 படத்தை பற்றி விமர்சனம் செய்திருக்கிறார். அதாவது தமிழ் சினிமாவில் இப்போது லோகேஷ் கனகராஜ் எப்படி எல்சியு பெயரில் படங்களை எடுத்து வருகிறாரோ அதேபோல் பாலிவுட்டில் டைகர் 3 படத்தை எடுத்து மொக்கை செய்து வைத்து இருக்கிறார்கள்.

மேலும் இரு நாடுகளின் ஸ்பையாக இருக்கும் சல்மான் கான் மற்றும் கத்ரீனா கைஃப் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். இவர்களுக்கு 10 வயதில் ஒரு குழந்தையும் இருக்கிறது. அதன் பிறகு சல்மான் கானுக்கு அவரது மனைவி கத்ரீனா கைஃப் தான் ஸ்பை என்பது தெரிய வருகிறது.

Also Read : வழியே இல்லாமல் சல்மான் கான் இடம் சரணடைந்த பிரபுதேவா.. சம்பாதித்த மொத்த பணத்துக்கும் வந்த ஆபத்து

அப்போது ஹீரோயினை பின் தொடரும்போது அவர்களது குழந்தை கடத்தப்படுகிறது. மேலும் வில்லனால் சல்மான் கானுக்கு ஒரு அசைன்மென்ட் கொடுக்கப்படுவதால் இந்தியாவுக்கு எதிராக அவர் செயல்படுகிறாரா என்பதுதான் டைகர் 3. ஷாருக்கான் படத்தில் சல்மான் கான் நடித்திருந்ததால் இப்போது டைகர் 3 படத்திலும் சல்மான் கான் கேமியோ தோற்றத்தில் நடித்திருந்தார்.

மேலும் இருவரும் சண்டை போட்டால் பாலத்தின் மேல் தான் சண்டை போடுவேன் என்று சபதம் எடுத்திருக்கிறார்களா என்று தெரியவில்லை. 10 பைசாவுக்கு சண்டை காட்சிகள் எதுவும் பிரயோஜனம் இல்லாமல் இருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் சல்மான் கான் படமா இது என்பதே தனக்கு சந்தேகமாக இருக்கிறது என ஒரே போடாக போட்டிருக்கிறார் ப்ளூ சட்டை மாறன்.

Also Read : மூச்சி இருக்கிற வர விஸ்வாசம் அழியாது, தோல்வி என்பதே டைகருக்கு கிடையாது.. சல்மான் கான் அதிரடியில் டைகர் 3 ட்ரெய்லர்