ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

மூச்சி இருக்கிற வர விஸ்வாசம் அழியாது, தோல்வி என்பதே டைகருக்கு கிடையாது.. சல்மான் கான் அதிரடியில் டைகர் 3 ட்ரெய்லர்

Tiger 3 Trailer: சல்மான் கான் நடிப்பில் கடைசியாக வெளிவந்த கிஸி கா பாய் கிஸி கி ஜான் எதிர்பார்த்த வரவேற்பு பெறாத நிலையில் தற்போது டைகர் 3 தீபாவளி வெளியீடாக வெளிவர இருக்கிறது. அதிரடி ஆக்சன் காட்சிகளுக்கு பஞ்சமில்லாமல் 300 கோடியில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மனீஷ் ஷர்மா இயக்கத்தில் சல்மான் கான் உடன் இணைந்து கேத்ரினா கைஃப், இம்ரான் ஹாஸ்மி, ரேவதி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். அதன்படி ட்ரெய்லரின் ஆரம்பத்திலேயே நாட்டோட பாதுகாப்பிற்கும் நாட்டின் எதிரிகளுக்கும் நடுவில் ஒரு ஆள் அளவு தூரம் இருக்கிறது என்ற வசனத்தோடு தொடங்குகிறது.

அதைத்தொடர்ந்து பைக்கிலேயே சாகசம் செய்யும் சல்மான் கான் ரா ஏஜென்ட் ஆக மாஸ் காட்டுகிறார். அதிக பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் படம் என்பதாலேயே காட்சிக்கு காட்சி பிரம்மாண்டம் கொட்டி கிடக்கிறது. அதிலும் ஹீரோ பறந்து பறந்து சண்டை போடும் காட்சிகள் ஒவ்வொன்றும் வேற லெவல்.

அவருக்கு இணையாக கேத்ரினா கைஃப் ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு ஆக்ஷனில் மிரட்டுகிறார். இவர்களுக்குள் இருக்கும் காதல், பாசம் என விரியும் இந்த ட்ரெய்லர் வில்லனின் கண்ட்ரோலுக்கு செல்கிறது. ஹெலிகாப்டர், துப்பாக்கி சத்தம் என பின்னணி இசையும் மிரட்டலாக உள்ளது.

இப்படி ட்ரெய்லரிலேயே மிரட்டி இருக்கும் படகுழு வசனத்தையும் தீப்பொறியாக வைத்திருக்கின்றனர். ஆட்டத்துல முக்கியம் வீரம் இல்ல புத்திசாலித்தனம். மூச்சு இருக்கிற வர விசுவாசம் அழியாது டைகருக்கு தோல்வியே கிடையாது போன்ற வசனங்கள் சிறப்பாக இருக்கிறது.

அதிலும் தேசமா, குடும்பமா என்று வரும்போது சல்மான் கான் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு நாட்டுக்காக களமிறங்கும் காட்சிகளும் சரவெடியாக இருக்கிறது. இப்படியாக பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவர இருக்கிறது டைகர் 3. அந்த வகையில் முந்தைய படத்தின் தோல்வியை சல்மான்கான் இதன் மூலம் ஈடு கட்டுவாரா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

- Advertisement -

Trending News