Connect with us

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஓ சொல்றியா மாமாவுக்கு ஒரு காவாலய்யா! ரஜினியை பின்னுக்கு தள்ளிய தமன்னா, ப்ளூ சட்டையின் சேட்டை

ஜெயிலர் படத்தை சீண்டுவதையே ப்ளூ சட்டை மாறன் ஒரு வேலையாக வைத்துள்ளார்.

samantha-tamanna-rajini-blue sattai

Blue Sattai Maaran: இப்போது எங்கு திரும்பினாலும் ஜெயிலர் பற்றிய பேச்சு தான் அதிகமாக இருக்கிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடித்துள்ள இப்படம் வெளிவருவதற்கு இன்னும் சில தினங்களே இருக்கிறது. அதனாலேயே படம் பற்றிய ஆர்வமும் ரசிகர்களுக்கு அதிகமாகியுள்ளது.

மேலும் டிக்கெட் புக்கிங்கும் தாறுமாறாக இருந்து வரும் நிலையில் ப்ளூ சட்டை மாறன் தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் ஜெயிலர் படத்தை சீண்டுவதை ஒரு வேலையாகவே வைத்துள்ளார். ஏற்கனவே இசை வெளியீட்டு விழாவில் ரஜினி சொன்ன காகம் பருந்து கதையை விடாமல் பிடித்து வரும் ப்ளூ சட்டை இப்போது மீண்டும் சேட்டையை ஆரம்பித்துள்ளார்.

Also read: 72 வயசு எல்லாம் என்ன, 86 வயசிலும் நடித்த அரக்கன்.. சூப்பர் ஸ்டாரை மீண்டும் வம்பிழுக்கும் ப்ளூ சட்டை

அதாவது அவர் ஜெயிலர் படத்தை நீங்கள் பார்ப்பதற்கு முக்கிய காரணம் என்ன என்ற கருத்துக்கணிப்பை நடத்தி இருந்தார். அதில் தமன்னாவின் டான்ஸ் என்ற காரணம் தான் அதிக வாக்குகளை பெற்றுள்ளது. அதற்கு அடுத்தபடியாக தான் தலைவரின் ஆக்சன் என்ற காரணத்தை ரசிகர்கள் குறிப்பிட்டு இருக்கின்றனர்.

தற்போது இதைப்பற்றி கருத்து தெரிவித்துள்ள ப்ளூ சட்டை மாறன் புஷ்பா பட வெற்றிக்கு சமந்தாவின் ஓ சொல்றியா மாமா ஐட்டம் பாடல் தான் முக்கிய காரணமாக இருந்தது. அதேபோல் தான் ஜெயிலர் படத்தின் ஆர்வத்திற்கும் தமன்னாவின் ஆட்டம் தான் காரணம் என தெரிவித்துள்ளார்.

Also read: ஒரே வார்த்தையில் ஜெயிலர் டிரைலரை அசிங்கப்படுத்திய ப்ளூ சட்டை.. பப்ளிசிட்டி பைத்தியம் ஆகிவிட்டார் போல

ஏற்கனவே இவர் நடிகைகளின் கவர்ச்சி நடனத்தால் தான் சூப்பர் ஸ்டார் இன்னும் வெற்றியை ருசித்துக் கொண்டிருக்கிறார் என கூறி வந்தார். இந்நிலையில் ஒரு கருத்துக்கணிப்பே நடத்தி ரஜினியை சீண்டி இருப்பது ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.

அந்த வகையில் ப்ளூ சட்டை கொடுக்கிற காசுக்கு மேல கூவுறார் என்றும் வேண்டுமென்றே நெகட்டிவிட்டியை பரப்புகிறார் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். எது எப்படி இருந்தாலும் ஜெயிலர் படம் வரலாறு காணாத அளவுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் வசூல் வேட்டையாடும் எனவும் சினிமா விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Also read: ரஜினியை விடாமல் சீண்டி பார்ப்பதே வேலையா போச்சு.. சூப்பர் ஸ்டாரின் இமேஜை பங்கம் பண்ண ப்ளூ சட்டை

Continue Reading
To Top