வாய்க்கு பூட்டு போட்ட மாஸ் ஹீரோக்கள்.. பூதாகரமாக வெடித்த விவகாரம், ஒருத்தர் விடாம பங்கம் செய்யும் ப்ளூ சட்டை

Blue Sattai Maaran: எப்போதுமே சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ப்ளூ சட்டை மாறன் சமீப காலமாக எல்லா ஹீரோக்களையும் வச்சி செய்து வருகிறார். இதற்கு எப்போதுமே எதிர்ப்பலைகள் கிளம்பினாலும் தற்போது பூதாகரமாகியுள்ள ஒரு விவகாரத்தில் ப்ளூ சட்டை மாறனுக்கு ஆதரவு குவிந்து வருகிறது.

அதாவது காவிரி நீர் விவகாரம் இப்போது சர்ச்சையாக வெடித்துள்ளது. தமிழ்நாட்டுக்கு தண்ணீர் விடக்கூடாது என கர்நாடகாவில் கிளம்பிய எதிர்ப்புக்கு தற்போது பல கண்டனக் குரல்களும் எழுந்து வருகிறது. ஆனால் மாஸ் ஹீரோக்கள் யாரும் இது குறித்து வாய் திறக்காமல் இருக்கின்றனர்.

Also read: பேத்தி வயது நடிகை என்று பாராமல் ஜோடி போட்ட ரஜினி.. கூச்சமே இல்லாமல் டூயட் பாடிய 6 கதாநாயகிகள்

அதை சுட்டிக் காட்டும் விதமாக ப்ளூ சட்டை மாறன் தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் அவர்களை எவ்வளவு முடியுமோ அவ்வளவு கலாய்த்து தள்ளியுள்ளார். அதிலும் ஒவ்வொரு ஹீரோவையும் அவர்கள் நடித்த படங்களின் போஸ்டரை போட்டே பங்கம் செய்துள்ளார்.

அந்த வகையில் சத்யராஜ் என்கிறது உங்க பேரு, புரட்சித்தமிழன் என்பது நீங்க படிச்சு வாங்குன பட்டமா என கேள்வி எழுப்பியுள்ளார். ஏனென்றால் பல வருடங்களுக்கு முன்பு சத்யராஜ் இது போன்ற காவேரி நீர் விவகாரத்தில் கன்னடர்களுக்கு எதிராக பேசியிருந்தார். ஆனால் இப்போது வாய்க்கு பூட்டு போட்டு விட்டார்.

Also read: வேண்டா வெறுப்பா நடிச்ச விஷால், ஸ்கோர் செய்த எஸ் ஜே சூர்யா.. என்ன ப்ளூ சட்டை இப்படி சொல்லிட்டாரு

அதைத்தான் ப்ளூ சட்டை நக்கலாக பதிவிட்டு இருக்கிறார். அதேபோன்று பேசாத கமல், எதற்கும் துணியாத சூர்யா, தலைவா டைம் டு மியூட் என விஜய்யையும் கிண்டலடித்துள்ளார். அதேபோன்று விஷால், சிம்பு, தனுஷ், ரஜினி என பாராபட்சமே பார்க்காமல் அனைவரையும் வம்புக்கிழுத்து வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் வட்டாள் நாகராஜ், ரஜினி கர்நாடகா பக்கம் வரக்கூடாது என்ற பிரச்சனையை கிளப்பியதில் இருந்து சித்தார்த் அவமானப்படுத்தப்பட்டது வரை பல விஷயங்களும் சர்ச்சையாகிக் கொண்டிருக்கிறது. ஆனால் டாப் நடிகர்கள் அதை கண்டுகொள்ளாமல் மௌன சாமியாராக இருப்பது நிச்சயம் சுயநலம் தான் என்ற ரேஞ்சில் இப்போது கருத்துக்கள் கிளம்பியுள்ளது.

Also read: 500 கோடி, 1000 கோடி வடையெல்லாம் இனி செல்லாது.. 7 முக்கிய முடிவுகளால் மிரளும் ரஜினி, விஜய்