வேண்டா வெறுப்பா நடிச்ச விஷால், ஸ்கோர் செய்த எஸ் ஜே சூர்யா.. என்ன ப்ளூ சட்டை இப்படி சொல்லிட்டாரு

Blue Sattai Maaran-Mark Antony: வரிசையாக தோல்வி படங்களை கொடுத்து நொந்து நூலாகி போயிருந்த விஷால் இப்போது உச்சகட்ட சந்தோஷத்தில் மிதந்து கொண்டிருக்கிறார். நேற்று இவரின் மார்க் ஆண்டனி படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் டைம் டிராவல் சம்பந்தப்பட்ட கதையாக வெளிவந்துள்ள இப்படம் தற்போது ரசிகர்களை பக்காவாக என்டர்டைன் செய்து வருகிறது. குடும்பத்தோடு பார்க்கக்கூடிய வகையில் நகைச்சுவை கலந்து அலப்பறை கொடுத்திருக்கும் இப்படம் பற்றிய விமர்சனத்தை ப்ளூ சட்டை மாறன் வெளியிட்டுள்ளார்.

Also read: அல்லோலப்படுத்திய விஷாலின் மார்க் ஆண்டனி.. மிரட்டும் பாக்ஸ் ஆபிஸ் வசூல் ரிப்போர்ட்

அவர் கூறியிருப்பதாவது, படத்தின் கதையை ஜவ்வாக இழுக்காமல் இயக்குனர் நேரடியாக விஷயத்திற்கு சென்றுள்ளது சிறப்பு. அதே போன்று எஸ் ஜே சூர்யா மொத்த படத்தையும் தன் கண்ட்ரோலுக்கு கொண்டு வந்து விடுகிறார். முதல் பாதி அப்படி இப்படி என்று இருந்தாலும் இரண்டாம் பாதி ரகளையாக இருக்கிறது.

அதிலும் சில்க் வரும் காட்சியில் எஸ் ஜே சூர்யாவின் நடிப்பு வேற லெவலில் இருக்கிறது. அதே போன்று பின்னணி இசை, நடிப்பு, வசனம் என கொஞ்சம் ஓவராக இருந்தாலும் கதைக்கு அது பொருத்தமாக இருப்பதால் சலிப்பு தட்டவில்லை என்றும் பாராட்டி உள்ளார்.

Also read: 2K கிட்சுக்கு கிடைத்த சில்க் தரிசனம்.. தியேட்டரையே அலறவிட்ட மார்க் ஆண்டனி

மேலும் ஜிவி பிரகாஷ் பழைய பாடல்களை வைத்தே ரசிகர்களை ஆட்டம் போட வைத்துள்ளார். ஆனால் விஷால் தான் ஏதோ வேண்டா வெறுப்பாக நடித்தது போல் இருக்கிறது. ஆனால் கிளைமாக்ஸ் காட்சியில் அது கொஞ்சம் சரி செய்யப்பட்டு விட்டது என்று படத்தின் குறைகளையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த வகையில் இப்படம் லாஜிக் இல்லாமல் பார்க்கக்கூடிய நல்ல பொழுதுபோக்கான ஒரு படம் என்று ப்ளூ சட்டை மாறன் தெரிவித்துள்ளார். இப்படி அவர் இந்த படத்தை நல்லபடியாக புகழ்ந்து விமர்சித்திருப்பது ஆச்சரியமாக இருந்தாலும் படம் அந்த தரத்துடன் தான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Also read: ஜெயிக்கிற லாஜிக்கை ஒரு வழியாக கண்டுபிடிச்ச விஷால்.. விட்டுக் கொடுத்து கெட்டுப் போகாத மார்க் ஆண்டனி

- Advertisement -