சனிக்கிழமை, நவம்பர் 2, 2024

சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்த மாமியார்.. விடாமல் துரத்தும் சக்காளத்தி சண்டை

Baakhiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் இப்போது சுவாரசியமான காட்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. அதன்படி திடீரென கோபிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவரை ஈஸ்வரி பாக்யா வீட்டுக்கு அழைத்து வந்து விட்டார். ஆரம்பத்தில் இது பாக்யாவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்றாலும் வேறு வழி இல்லாமல் சம்மதித்தார்.

இதைத்தொடர்ந்து ராதிகா மட்டும் அவருடைய வீட்டில் இருக்கும் நிலையில் கோபி இப்போது எப்படி இருக்கிறார் என்று விசாரிப்பதற்காக போன் செய்கிறார். ஆனால் கோபியிடம் ராதிகா பேசுவதை பார்த்து எரிச்சல் அடைந்த ஈஸ்வரி உடனடியாக போனை வாங்கி கண்டபடி திட்டி விடுகிறார். இதனால் ராதிகாவுக்கு கோபம் தலைக்கேறியது.

அதோடு மட்டுமல்லாமல் தனது அம்மாவிடம் இனி இந்த வீட்டுக்கு வந்தால் கோபியுடன் தான் வருவேன் என்று பெட்டி படுக்கை எல்லாம் கட்டிக்கொண்டு சென்று விட்டார். இந்த சூழலில் ராதிகா கோபி வீட்டுக்கு வந்தவுடன் ஈஸ்வரி ஏன் இங்கே வந்தாய் என்று திட்டுகிறார். கோபியுடன் தான் இருப்பேன் என்று அதிரடியாக சொல்லிவிட்டு ராதிகா உள்ளே செல்கிறார்.

இதனால் பாக்கியா நிலைகுலைந்து போகிறார். சும்மாவே சக்காளத்தி கதையை வைத்து உருட்டி வந்த பாக்கியலட்சுமி தொடரில் இப்போது பாக்யா மற்றும் ராதிகா இடையே மீண்டும் பிரச்சனை வெடிக்க இருக்கிறது. ராதிகா தான் உண்டு தன்னுடைய வேலை உண்டு என அவரது வீட்டில் இருந்தார். ஆனால் சும்மா இருந்த சங்கை உதிக்கெடுப்பது ஈஸ்வரி ஒரு வேலை பார்த்து விட்டார்.

அதோடு மட்டுமல்லாமல் ஏற்கனவே செழியன், ஜெனி இடையே ஒரு பிரச்சனை போய்க்கொண்டிருக்கிறது. மற்றொருபுறம் எழிலின் வாழ்க்கை என்னாகும் என்ற பதட்டத்தில் பாக்யா இருந்து வருகிறார். ஏனென்றால் அமிர்தாவின் முன்னாள் கணவர் கனேஷ் இப்போது உயிருடன் திரும்பி வந்துவிட்டார்.

இவ்வாறு பிரச்சனைக்கு மேல் பிரச்சனையை பாக்யா சந்தித்து வரும் நிலையில் வீட்டிலேயே குடைச்சல் கொடுப்பதற்காக ராதிகா வந்திருக்கிறார். ஆகையால் பாக்கியலட்சுமி தொடர் இனி சூடு பிடிக்க உள்ளது. மேலும் அடுத்தடுத்த எபிசோடுகளில் எதிர்பார்க்காத பல விஷயங்கள் பாக்கியலட்சுமி தொடரில் அரங்கேற இருக்கிறது.

- Advertisement -spot_img

Trending News